Monday, 18 November 2013

Tagged Under: , ,

அலுவலகத்தில் வேலை செய்வதை தவிர்க்க சில புதுமையான யோசனைகள்!

By: Unknown On: 11:38
  • Share The Gag
  • உங்களுடைய வேலையிலிருந்து சற்றே கிளம்பிச் செல்லவோ அல்லது அதனை மறக்கவோ ஒரு காரணம் வேண்டும் என்ற நீங்கள் நினைக்கிறீர்களா?

    ஏதாவதொரு வேலையை நமக்கு தேவையில்லை என்றோ அல்லது செய்ய முடியாது என்றோ நாம் தவிர்க்க நினைப்போம். வேலைக்காக நம்மை நம்பியிருப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, அந்த வேலைகளை செய்யாமல் தவிர்க்க நமக்கு நல்ல காரணங்கள் தேவைப்படுகின்றன.

    வேலையை தவிர்க்க உடல் நலம் சரியில்லை, குடும்ப பிரச்சனைகள் மற்றும் சொந்த காரணங்களை சொல்வது மிகவும் தேய்ந்து போன பழைய காரணங்களில் ஒன்றாகும். ஆனால், இந்நாட்களில் இந்த காரணங்களின் உண்மைகளை எளிதில் கண்டறிந்து விட முடியும். எனவே தான், நாம் புதுமையான யோசனைகளின் துணையைத் தேட வேண்டியுள்ளது. அவை மிகவும் எளிதாக நம்பக் கூடியவையாகவும், மாறுபட்டதாகவும் மற்றும் உண்மையாகவும் இருக்க வேண்டும்.

    அலுவலகத்தில் வேலை செய்வதை தவிர்க்க சில புதுமையான யோசனைகள்!!!

    அது போன்ற சில யோசனைகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.

    'தெய்வீக அருள் பெற்றவர்' வருகை - நீங்கள் உங்களுடைய பாஸிடம் சென்று தெய்வீகத்தன்மை கொண்ட ஒருவரை பார்க்கச் செல்வதாகவோ அல்லது உங்கள் நகரத்திற்கு வந்திருக்கும் மிகவும் மத நம்பிக்கை உள்ளவரை பார்க்கச் செல்வதற்காக உங்களுடைய சொந்த நகரத்திற்கு செல்வதாகவும் கூறலாம். இந்த காரணம் பெரும்பான்மையான நேரங்களில் சரிவர வேலை செய்யும். ஆனால், உங்களுடைய பாஸுக்கு கடவுளைப் பற்றி அதிக தகவல்கள் தெரியவில்லை என்றால் மட்டுமோ அல்லது நீங்கள் ஒரு நாத்திகர் என்று அவருக்குத் தெரிந்திருந்தாலோ மட்டும் தான் இந்த காரணம் பயன்படாமல் போகும்.

    சட்டம் தொடர்பான காரணங்கள் - நம் நாட்டின் சட்ட அமைப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். நாம் ஒருமுறை போகாவிட்டால் கூட எந்த வேலையும் நடக்காது. எனவே உங்களுடைய சட்ட ரீதியான ஆவணம் சார்ந்த பணிக்கோ, சான்றிதழ் பெறவோ அல்லது வாக்குமூலம் கொடுக்க செல்வதாகவோ காரணம் சொல்லலாம். உங்களுடைய பாஸை சமாதானப்படுத்துவது தான் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.

    கல்யாண வரன் பார்த்தல் - குறிப்பிட்ட வயதுக்கு பின்னர், உங்களுக்கு கல்யாண வரன் பார்க்கும் அறிவிப்புகள் வருவது இயல்பு தான். நீங்கள் இதனை ஒரு சிறந்த காரணமாக சொல்லி வேலை செய்வதை தவிர்க்கலாம். நீங்கள் உங்களுடைய வருங்கால வாழ்க்கைத் துணையை பார்க்கப் போவதாக சொல்லலாம். அடுத்த முறை, அந்த சந்திப்பு எப்படி இருந்தது என்று கேட்டால், ‘சரியில்லை' என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லித் தப்பி விடலாம்.

    நண்பரின் இறுதிச் சடங்கு - வேலைக்கு செல்வதை தவிர்க்க உங்களுடைய தாத்தா அல்லது சொந்தக்காரர்களை கொல்வது சாதாரண விஷயமாகி விட்டது. இப்பொழுது, இதில் உங்கள் நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாராவது ஒரு நண்பருடன் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், நண்பரின் இறுதிச் சடங்கிற்கு செல்வதாக சொல்லுங்கள். 'ஒவ்வொரு நண்பரும் முக்கியமானவரே' என்று சொல்வதைப் போல. ஆனால், மீண்டும் அதே நண்பரின் பெயரை சொல்லி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    'உதவி செய்யப் போகிறேன்' - நீங்கள் விபத்தில் மாட்டிக் கொணட ஒரு பெண்ணுக்கு உதவவோ அல்லது வேறொருவருக்கு உதவிக்காக லிப்ட் கொடுப்பதாகவோ சொல்லி உங்கள் வேலையைத் தவிர்க்கலாம். நீங்கள் அனைவருக்கும் உதவி செய்வது பயனுள்ளதாக இருக்கும், அதே வேளையில் வேலை செய்யாமலும் தவிர்க்க முடியும்.

    இவையெல்லாம் உங்கள் வேலையை தவிர்ப்பதற்கான, சற்றே வித்தியாசமான மற்றும் விளையாட்டான யோசனைகளாகும். இதே போன்ற பல புதுமையான யோசனைகளை நீங்களும் வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இவையெல்லாம் புதிய யோசனைகள் மற்றும் பழையனவற்றை விட சற்றே திறன் மிக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பது தான் இவற்றின் சிறப்பு.

    0 comments:

    Post a Comment