Monday, 18 November 2013

Tagged Under: , ,

விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது....?

By: Unknown On: 10:04
  • Share The Gag
  • விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது, விமானத்தின் எப்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது விபத்து காலங்களில் சற்றே பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வானில் பறக்கும் விமானம் பத்திரமாக தரையில் இறங்கும் வரை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தான் நிஜம். சுமார் 30000முதல் 50000 அடி உயரத்தில் அதுவும் 800 முதல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்விமானம் ஏதோ காரணத்தினால் கீழே விழும் பொழுது அதில் பயணம் செய்வோர் உயிர் பிழைப்பது என்பது மிக மிக அரிது. இருந்த போதிலும் அது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் விமானத்தின் எப்பகுதி இருக்கையில் அமர்ந்தால் சற்றே பாதுகாப்பாக இருக்கும் என்பது தான் இந்த ஆய்வின் நோக்கம்.

    பிரிட்டனில் இருந்து செயல் படும் ஒரு தனியார் தொலைக்காட்சி போயிங்குடன் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. விமானம் ஒன்றில் கேமரா பொருத்தப்பட்டு, விமானத்தினுள் "மாதிரி" மனிதர்கள் அமர்த்தப்பட்டு அந்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது உள்ளே நிகழும் பாதிப்புகளை கண்டறிந்தனர். இவை மட்டும் இல்லது இதுபோன்ற கடந்த 30 வருடங்களாக பல்வேறு தருணங்களில்நடத்தப்பட்ட ஆய்வும் கருத்தில் கொள்ளப்பட்டது.

    அதன்படி விமானம் விபத்துக்கு உள்ளாகும் போது, விமானத்தில் முதல் வகுப்பு வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் தான் முதலில் மிகுந்த பாதிப்பு உள்ளாகிறது. அதாவது முதல் பதினொன்று இருக்கைகள் தங்கள் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து சிதறி விடுகின்றன. விமானம் வந்த வேகத்தில் தரையில் மோதும் போது முதல் 11 இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைகின்றன. எனவே இதில் பயணம் செய்தவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என கூறலாம். அதே நேரத்தில் விமானத்தில் பின்புறம் அதாவது எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்யும் பயணிகள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

    இந்த ஆய்வு குறிந்து கருத்து தெரிவித்துள்ள போயிங் நிறுவனம், விமானத்தில் எல்லா இருக்கையும் ஒரே அளவு பாதுகாப்பு உடையது தான். விமானம் விபத்துக்குள்ளாகும் போது எவ்வாறு தரையில் படுகிறது என்பதை பொருத்து தான் அதன் பாதிப்பு அமையும். மேலும் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு, எனவே பாதுகாப்பான விமான பயணத்திற்கு சீட் பெல்ட் தான் மிக அவசியம் என தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பான விமானம் விபத்துக்குள்ளாவதில்லை என்றும், அதுபோன்ற விமானத்தில் பயணம் செய்வது தான் பாதுகாப்பானது என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுவரை நடந்த விமான விபத்துக்களில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் விமானத்தில் எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment