Saturday, 23 November 2013

Tagged Under: ,

பெங்களூர் ஏடிஎம்மில் பெண்ணை வெட்டியவன் சைக்கோவா?

By: Unknown On: 07:27
  • Share The Gag

  • பெங்களூர்: ஏடிஎம்மில் வங்கி பெண் அதிகாரியை வெட்டி பணம் பறித்த நபர் சைக்கோவா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூர், எல்.ஐ.சி அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் வங்கி அதிகாரி ஜோதியை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் தாக்கி பையில் இருந்த 15 ஆயிரம் பணம் மற்றும் அவரது செல்போனை எடுத்துச்சென்றான்.

    இவனைப்பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.போலீசார் விசாரணையில் ஜோதியின் செல்போன் ஆந்திராவில் இருந்தது தெரியவந்தது. ஆந்திர போலீசார் உதவியுடன் அபுசார் என்பவரிடம் அந்த செல்போன் இருந்தை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் ஒருவர் அந்த செல்போனை 500க்கு விற்றது தெரிந்தது.அதில் மர்ம நபர் ஜோதியை கத்தியால் தாக்கிவிட்டு அவரது பையில் இருந்த துணியை எடுத்து கத்தியை சுத்தம் செய்துகொண்டு பின்னர் ஜோதியின் பையில் இருந்த பணத்தை எடுத்துச்சென்றது பதிவாகியிருந்தது.


    இந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போலீசாருக்கு புதிய சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது. மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த நகைகளை எடுக்கவில்லை. மேலும் அவரது செய்கைகளும் சற்று வித்தியாசமாக இருந்ததால் அவர் சைக்கோவா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜோதி தற்போது பேச முடியாத நிலையில் உள்ளதால் அவர் முழுமையாக குணமடைந்த பின்னர்தான் மர்மநபர் என்ன பேசினார் என்பது குறித்து தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    0 comments:

    Post a Comment