Saturday, 23 November 2013

Tagged Under:

பாரதரத்னா பட்டம் பெற்றும் பந்தா இல்லாமல் சாதாரண டீக்கடைக்கு சென்ற சச்சின்!

By: Unknown On: 09:34
  • Share The Gag
  •  
    200வது டெஸ்ட் ஆட்டத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கருக்கு சமீபத்து இந்தியாவின் மிக உயர்ந்த 'பாரதரத்னா' பட்டம் வழங்கப்பட்டது.

    பல ஆண்டு காலமாக ஓய்வின்றி நாட்டுக்காக விளையாடிய சச்சின், ஓய்வுக்காக குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாதலமான முசூரிக்கு சென்றுள்ளார். அங்கு 5 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள அவர் லால்டிப்பா பகுதியில் உள்ள தனக்கு பிடித்தமான டீக்கடைக்கு சென்றார்.

    சச்சின் முசூரிக்கு வரும் போதெல்லாம் தனது நண்பர் சஞ்சய் நரங் என்பவர் வீட்டில் தங்குவது வழக்கம். அப்போது நண்பருடன் இந்த டீக்கடைக்கு அடிக்கடி வந்த சச்சினுக்கு டீக்கடையின் உரிமையாளர் பிரத்யேகமாக தயாரித்து தரும் மசாலா டீ மிகவும் பிடித்தப் போனது.

    இஞ்சி, தேன், எலுமிச்சைப் பழம் சேர்த்து கடையின் உரிமையாளர் விபின் பிரகாஷ் அளிக்கும் டீயை ருசிப்பதற்காக மனைவி அஞ்சலியுடன் சச்சின் இந்த கடைக்கு மீண்டும் விஜயம் செய்தார்.

    பன் மற்றும் டீயை ருசித்த அவர் சுமார் 1/2  மணி நேரம் அங்கேயே இருந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    சச்சினின் வருகையை பற்றி மகிழ்ச்சியுடன் கூறும் விபின் பிரகாஷ், 'அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

    எவ்வளவு உயர்ந்த நிலைக்கு போனாலும் அவர் இப்போதும் சராசரி வாடிக்கையாளர் போல் தான் பழகுகிறார்' என்று தெரிவித்தார்.

    0 comments:

    Post a Comment