Saturday, 23 November 2013

Tagged Under: ,

த்ரிஷாவின் கழுதை பாசம்!

By: Unknown On: 16:45
  • Share The Gag
  • நாய் பாசத்தையடுத்து கழுதை மீதும் பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறார் த்ரிஷா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து மணந்த அமலா, விலங்குகள் நலம் காக்கும் தொண்டு அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். விலங¢குகள் மீது பாசம் காட்டி அவைகளுக்கு சேவை செய்து வந்தார். அதேபோல் நாய்களை காக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார் த்ரிஷா.

    கேட்பாரற்று திரியும் தெரு ஓர நாய்கள் மீது இவர் காட்டும் பாசத்தால் பல நாய்கள் காக்கப்பட்டிருக்கின்றன. விலங்குகள் அமைப்பான பீட்டாவின் சார்பில் தனது சேவையை அவர் தொடர்ந்து வருகிறார். தற்போது நாய் பாசத்துடன் கழுதைகள் மீது பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.

    நாய்கள் தினம் கொண்டாடும் அவர் கழுதைகள் தினம் என்ற தலைப்பில் தனது இணையதள பக்கத்தில் கழுதைகளுக்கு உணவு தருவதுபோல் படம் வெளியிட்டிருக்கிறார். கழுதையின் வால் பகுதியில் தகரங்களை கட்டி நடுரோட்டில் ஓடவிட்டு அதன் கஷ்டத்தை ரசிக்கும் சிலரின் குரூர மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் கருத்தும் வெளியிட்டிருக்கிறார்.

    கழுதைகளுக்கு த்ரிஷா உணவு தருவது போன்ற படங்களையும் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் அவரது அன்புக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். தற்போது த்ரிஷா தமிழில் என்றென்றும் புன்னகை, பூலோகம், பாண்டியன் இயக்கும் படம் என 3 படங்களில் நடித்து வருகிறார்.

    0 comments:

    Post a Comment