Friday, 29 November 2013

Tagged Under: , ,

சச்சினுக்கு 'பாரத ரத்னா' விருது தர எதிர்ப்பு : சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

By: Unknown On: 21:43
  • Share The Gag


  • சச்சினுக்கு பாரதரத்னா விருது வழங்கும் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


    சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனகசபை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


     விருது பெறுவதற்கான தகுதி சச்சினுக்கு இல்லை என மனுவில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.


    அதிகாரப்பூர்வமாக விருதை அறிவிக்கும் முன் அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும் எனவும், அரசாணையும் இல்லாமல் பாரத ரத்னா விருதை அறிவித்தது தவறு எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


    மேலும் இந்த மனுவில் கலை, இலக்கியம், அறிவியல்துறையில் சிறந்து விளங்குவோருக்கே விருது தரப்பட்டு வருகிறது எனவும்,


    சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கும் அரசின் முடிவை ரத்து செய்யவும் மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment