Friday, 29 November 2013

Tagged Under: , , ,

வாழ்க்கையைப் வாழ்ந்து பாருங்கள்!

By: Unknown On: 23:19
  • Share The Gag
  • சிறுவன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.

    அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

    அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான்.

    அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.

    ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள். ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள்.

    வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.

    அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.

    இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள்.

    வாழ்ந்து பாருங்கள்.

    0 comments:

    Post a Comment