Monday, 30 December 2013

Tagged Under: , ,

2014ல் வெளியாகுமா சிம்புவின் லவ் ஆந்தம் ?

By: Unknown On: 20:28
  • Share The Gag



  • லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் லவ் ஆந்தம் டீசர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 27ல் வெளியாகிப் பிரபலமானது. சுமார் 96 மொழிகளில் சிம்பு பாடியிருக்கும் இப்பாடல் ஆல்பத்தின் வெளியீடு எப்பொழுது என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில் அமெரிக்க ஹிப் ஹாப் பாடகரான ஏகன் கடந்த மே மாதத்தில் சென்னை வந்திருந்தார். சிம்புவின் லவ் ஆந்தம் இசை ஆல்பத்தில் அவரும் பாடவிருப்பது ஏற்கெனவே அறிந்ததே. எனவே சிம்புவின் இசை ஆல்பம் விரைவில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    சர்வதேசப் பிரபலப் பாடகரான ஏகனுடன் சிம்பு பாடியிருக்கும் இந்த ஆல்பத்தின் உருவாக்கத்தில் ட்ரேக்டிகல் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரும்பங்காற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


    இந்த ஆல்பத்தைப் பற்றி சிம்பு குறிப்பிடுகையில் “ மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பும், விருப்பமும் என்னை மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலப் பாடகரான ஏகனுடன் பாடியது மிகவும் இனிமையாக அமைந்தது. இதைச் சாத்தியமாக்கிய ட்ரேக்டிகல் எண்டெர்டெயின்மெண்டிற்கு நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு இந்த இசை ஆல்பம் மிகப் பெரிய அளவில் வெளியிடப்படும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உலக அமைதிக்காக சுமார் 96 மொழிகளில் சிம்பு பாடியுள்ள இந்த இசை ஆல்பத்தின் ட்ரெய்லர் யூடியூபில் சுமார் 23 லட்சம் ஹிட்டுகளுக்கும் மேலாகப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment