Monday, 30 December 2013

Tagged Under: ,

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம் பிரபிவின் அரிமா நம்பி

By: Unknown On: 18:50
  • Share The Gag




  • விக்ரம் பிரபு மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்துவரும் அரிமா நம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.


    கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ஆனந்த ஷங்கர் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.


    விக்ரம் பிரபு நடிப்பில் சமீபமாக வெளியான “இவன் வேற மாதிரி” திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததுடன், சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவன் வேற மாதிரி திரைப்படத்தை எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குனர் சரவணன் இயக்கியிருந்தார்.


    விக்ரம் பிரபு தற்பொழுது சிகரம் தொடு மற்றும் தலப்பாக்கட்டை முதலான படங்களில் நடித்துவருகிறார். பிரியா ஆனந்த் தற்பொழுது வை ராஜா வை,
    பொடியன், இரும்புக் குதிரை முதலான படங்களில் நடித்துவருகிறார்.

    0 comments:

    Post a Comment