Monday, 30 December 2013

Tagged Under: , ,

ஆர்யா - விஜய்சேதுபதி கூட்டணியில் ஷியாம்...?

By: Unknown On: 00:43
  • Share The Gag



  • புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதியுடன் இணைகிறார் ஷியாம்.யுடிவி நிறுவனம் தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பது ஏற்கனவே வெளிவந்த தகவல்.


    புதிதாக அந்த படத்தில், ஆர்யா–விஜய் சேதுபதியுடன் ஷியாம் இணைகிறார்.சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை இது. அவருக்கு உறுதுணையாக இருக்கிறார், இன்னொரு இளைஞர்.


    இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக ஒரு பொலிஸ் அதிகாரி நிற்கிறார்.


    அந்த பொலிஸ் அதிகாரி வேடத்தில், ஷியாம் நடிக்கிறார்.


    படத்தின் கதாநாயகியாக கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


    படப்பிடிப்பு ஜனவரி 14ம் திகதி பொங்கல் அன்று குலுமனாலியில் தொடங்குகிறது.


    தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.


    இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.

    0 comments:

    Post a Comment