
வெதுவதுப்பான நீரிலோ அல்லது சுத்தமான நீரிலோ கையை கழுவ வேண்டும். கை கழுவத்தானே என்று அசுத்த நீரைப் பயன்படுத்தினால், கைகளில் இருக்கும் கிருமிகள் போதாது என்று நீரில் உள்ள கிருமிகளும் சேர்ந்து கொள்ளும்.
ஒரு நபரைச் சந்திததும் மேலைநாடுகளில் வழக்கப்படி, கை கொடுத்துக் கொள்கிறோம். இந்த வழக்கம், பல தொற்று நோய்களை எளிதில் பரப்புவதாக ஆய்வுகள் கூறுகிறது. தண்ணீரில் அலசி, உதறினால் போதும் என்று எண்ணாமல், கைகளை சோப்பு கரைசல் கொண்டு, முன்னும் பின்னும் 20 நொடிகள் நன்றாகத் தேய்த்து, துய்மைப்படுத்திப் பாருங்களேன். ஜலதோஷம், இருமல் போன்ற தொல்லைகள் நீங்குவதை நீங்களே உணரலாம்.
0 comments:
Post a Comment