Wednesday, 1 January 2014

Tagged Under: , ,

கமலுடன் மீண்டும் இணைகிறார் மீனா..?

By: Unknown On: 16:03
  • Share The Gag


  • விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் கமல், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிப்பதாகத்தான் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தில் தமிழ் ரீமேக்கில் கமலே நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.

    மலையாளத்தில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அப்படத்தின் ரீமேக் உரிமையை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதுவரை இந்த தொகைக்கு எந்த மலையாள படமும் விலைபோனதில்லையாம். அதனால் கமல் மாதிரி முன்னணி நடிகர்கள் நடித்தால் படத்தை பிரமாண்டமாக்கி பெரிய தொகையை எடுத்து விடலாம் என்று அவரை அணுகியுள்ளார்களாம். ஆனால் கமல்தரப்பு இன்னும் உரிய பதிலை சொல்லவில்லையாம். விஸ்வரூபம்-2 வந்த பிறகுதான் எதையுமே சொல்ல முடியும் என்று கூறி விட்டாராம்.

    இந்தநிலையில், இந்த படம் கமலிடம் சென்று விட்ட தகவலை அறிந்த மீனா, மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த தான் தமிழில், கமலுக்கும் ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் நடித்தவர் என்பதால், தான் அவருடன் நடிக்க தகுதி உள்ள நடிகைதான் என்பதால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளாராம மீனா.

    ஒருவேளை, கமல் மறுத்தால் பசுபதியை வைத்து படத்த இயக்குவோம் என்று மீனாவிடம் சொன்னபோது, அதனாலென்ன அவருடனும் குசேலன் படத்தில் நடித்திருக்கிறேனே. தமிழில் எந்தநடிகரை வைத்து இயக்கினாலும் ஹீரோயினி வாய்ப்பு எனக்குத்தான் தர வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு வைத்திருக்கிறாராம் மீனா.

    0 comments:

    Post a Comment