Wednesday, 1 January 2014

Tagged Under: ,

ஒரு கிராமத்துக்கு உணவு பரிமாறிய அஜித்!

By: Unknown On: 11:52
  • Share The Gag


  • விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படததில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் 'வீரம்' படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு அஜித் உணவு பரிமாறினார்.கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர். இது மெகாபந்தியாக இருந்தது என படக்குழுவினர் தெரிவித்தனர்.

    இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளே கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜித் பிறகு ஆவேசமாகி ஆக்ஷனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

    படத்தில் அஜித் வேட்டி சட்டை அணிந்து வருகிறார். மேலும் ஒரு காட்சியில் 2 கி.மீ மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார்.அந்தக் காட்சி முடிந்ததும் "பிஎம்டபிள்யூ ஓட்டுனவனை மாட்டு வண்டி ஓட்ட வச்சுடீங்களேப்பா" என்று கிண்டலாக அஜித் சொன்னது யூனிட்டில் சிரிப்பை வரவழைத்தது என்று சிறுத்தை சிவா கூறினார்.

    0 comments:

    Post a Comment