சென்சார் போடு ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரை மட்டும் 380 படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் கொடுத்துள்ளது. ஆனாலும், இன்னும் பல படங்கள் சென்சார் ஆகாததால் ரிலீஸ் ஆகவில்லை.
தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' ,கார்த்தியின் 'மெட்ராஸ்' , ஜெயம் ரவியின் 'பூலோகம்', மற்றும் விஜய் ஆண்டனியின் 'சலீம்' ஆகிய படங்களும் தணிக்கை சான்றிதழுக்காக வரிசையில் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு முதல் ஏழு படங்கள் வரை வெளியாகி வருகின்றன. ஆனால், இத்தகைய படங்களை தணிக்கை செய்யும் அளவுக்கு சென்சார் அமைப்பில் ஆட்கள் இல்லை.
ஆள் பற்றாக்குறையால் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல படங்கள் சென்சார் ஆகாமல், ரிலீஸ் தேதியைக் கூட அறிவிக்க முடியாத நிலையில் உள்ளன. 'வேலையில்லா பட்டதாரி' படம் ஜூலை 18ல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொறுப்பாளர் டி.சிவா அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் 15 படங்கள் தற்போது தணிக்கைக் குழுவின் சான்றிதழுக்காக காத்திருப்பதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கும் படியும் தெரிவித்துள்ளார்.
தணிக்கை தரப்பில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாகுறை பிரச்னையையும் விரைந்து தீர்க்கும்படியும் அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment