பல நாட்களாக தணிக்கைக்குழு சான்றிதழுக்காக காத்திருந்த 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு தற்போது தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.
தனுஷ் தயாரிப்பில் வேல்ராஜ் இயக்கித் திரைக்கு வரக் காத்திருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி' . தனுஷ், அமலா பால், சுரபி, சரண்யா, சமுத்திரக்கனி நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை அனிருத்.
படத்தின் வெளியீடு ஜூலை 18 என அறிவித்த நிலையில் தணிக்கைக் குழுவின் சான்றிதழுக்காக பல நாட்களாக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தணிக்கைக் குழு தரப்பில் ஏற்பட்ட ஆட்கள் பற்றாகுறை காரணமாக பல படங்கள் சென்சார் சான்றிதழை எதிர்நோக்கி ரிலீஸ் தேதியைக் கூட அறிவிக்காமல் காத்திருந்தன.
அவற்றில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படமும் ஒன்று . தற்போது படத்தை பார்த்த தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படம் முன்பே அறிவித்த படி ஜூலை 18ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 330 திரையரங்குகளில் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்' இப்படத்தை வெளியிட உள்ளனர்.

0 comments:
Post a Comment