Thursday, 10 July 2014

Tagged Under: ,

சும்மா இருந்தாலும் விடமாட்டாங்க போலிருக்கே!!! ராஜபக்சேவின் நண்பர் வீட்டு விழாவிற்கு செல்லும் விஜய்?

By: Unknown On: 16:55
  • Share The Gag
  • இப்போதெல்லாம் விஜய் படம் பிரச்னை இல்லாமல் வெளிவந்தால்தான் அதிசயம். இதில் கத்தியும் அடங்கும்.கத்தி படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பினாமியில் இந்த படம் தயாரிப்பதாகவும், இல்லை அவரது தொழில் பார்ட்னர் தயாரிகிறார் என்றும் சொல்லப்பட்டன. அதற்கு தமிழர்களிடம் எதிர்ப்பும் எழுந்தவண்ணம் உள்ளன. விஜய் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது என்றும் கூறினார்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்.

    அப்படியிருக்க இப்போது ஒரு செய்தி வந்த்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் விஜய் லண்டன் செல்லபோகிறார். சூட்டிங்கிற்கு என்றால் பரவாயிலை.அவர் போவது அதற்கில்லை.ராஜபக்சேவின் பார்ட்னரும் கத்தி தயாரிப்பாளர்களில் ஒருவருமான லைக்கா புரொடக்சன் நிறுவனர் அல்லிராஜா வீட்டு விழாவிற்காக செல்லவிருப்பதாக கூறுகிறார்கள்.

    அல்லிராஜாவின் தாயார் ஞானம் அம்மாளின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள விஜய்,சமந்தா உள்ளிட்ட கத்தி படக்குழுவினர் அனைவருமே அங்கு செல்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபட்சவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஐங்கரன் விளக்கம் கொடுத்தாலும் அதனை ஏற்றுகொள்ள முடியவில்லை என்றே பலரும் தெரிவித்துவருகின்றனர்.

     இந்நிலையில் அவர்களது கும்ப விழாவிற்கு வேறு செல்கிறார்கள்.இப்போதுதான் அந்த பிரச்னை கொஞ்சம் அடங்கியுள்ள சூழ்நிலையில் இந்த செய்தி தமிழர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தும் என பேசப்படுகிறது. நம்ம ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க “சும்மா
    இருக்குற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி”னு அது மாதிரி அடங்கியிருக்கும் பிரச்னையை இவர்களே கிளப்பிவிடுவார்கள் போலிருக்கே!!!

    பார்ப்போம் இதற்கு என்ன விளக்கம் கூறுகிறார்கள் என்று.

    0 comments:

    Post a Comment