Thursday, 10 July 2014

Tagged Under: ,

சீனாவில் 'ஐ' படத்தின் அதிரடி சண்டை காட்சிகள்

By: Unknown On: 23:40
  • Share The Gag
  • ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் 'ஐ'.  இதில் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் வருகிறார். மேலும் தன் உடல் எடையயும் கணக்கிட முடியாத அளவிற்கு இறக்கி, ஏற்றி தன் முழு உழைப்பையும் அளித்து வருவது அறிந்ததே.

    விக்ரமின் பிரத்யேக தோற்றத்திற்காக நியூசிலாந்து நாட்டின் WETA எனும் நிறுவனத்தின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே இந்நிறுவனம் ஸ்பெஷல் எஃபெக்ட்டுகள் செய்வது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் சீனா, சென்னை, கொடைக்கானல், பொள்ளாச்சி,ஒடிசா அகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

    கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தொடர்ந்து 25 நாட்கள் ஒடிசாவில் படமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 'ஐ' படம் 2014ம் ஆண்டின் மிக பிரம்மாண்ட படமாக அமையும் என தெரிகிறது.

    படத்தின் பாடல்கள் ஆகஸ்டில் வெளியாகும் எனவும், படம் செப்டம்பரில் வெளியாகும் எனவும் அறிவிப்புகள் வந்தாலும் இன்னும் இறுதி முடிவுகள் வரவில்லை.

    0 comments:

    Post a Comment