Sunday, 24 August 2014

Tagged Under: ,

ஒருதடவை முடிவு பண்ணிட்டா வெயிட் பண்ணக்கூடாது- விஜய் அதிரடி முடிவு!

By: Unknown On: 12:41
  • Share The Gag
  • சமீபகாலமாக எந்த நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு விஜய் படங்கள் வெளியாகும்போது மட்டுமே ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் எழுந்து காண்டேயிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் இருந்து தன்னை நோக்கி பாயும் ஏவுகணகைள்தான் என்பதை முன்பே யோசித்து விட்டதால் ஆளும்கட்சி வர்க்கத்தினருககு எதிராக பஞ்ச் டயலாக் பேசுவதை தற்போது சுத்தமாக தவிர்த்து வருகிறார் விஜய்.

    ஆனபோதும், இந்தியக்குடிமகன் என்பதை கருத்தில் கொண்டு சமூகத்துக்கு தீங்கு இழைப்பவர்களுக்கு எதிராக அவர் தனது படங்களில் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில், இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்தில், தான் வில்லனாக நடித்துள்ள வேடத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் விஜய். இதை மற்ற நடிகர்களை வைத்து சொன்னால் அதை வைத்தே பிரச்சினையை பெரிதாக்குவார்கள் என்பதால், நல்லவனும் நானே, கெட்டவனும் நானே என்பதுபோல் இரண்டு வேடங்களிலும் தானே நடித்திருக்கிறார்.

    இருப்பினும், வழக்கம்போல் எதிர்ப்புகள் படையெடுத்தவண்ணம் உள்ளன. ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைக்கா நிறுவனம் தயாரித்திருப்பதால் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று எதிர்ப்புக்குரல்கள் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக்கொண்டுள்ளன. இதுசம்பந்தமாக இதுவரை அமைதியாக இருந்து வந்த விஜய், இப்போது களமிறங்கி விட்டாராம். அதன் முதல்கட்டமாக மாணவர் அமைப்புகளை அழைத்து என்ன விசயம். எதற்காக இப்படி செய்கிறீர்கள் என்று நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதாம்.

    அதில் அவருக்கு என்ன க்ளூ கிடைத்ததோ, இப்போது ஒருதடவை முடிவு பண்ணிட்டா வெயிட் பண்ணக்கூடாது போய்க்கிட்டே இருக்கனும் என்று தனது சமூகவலைதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார். விஜய்யின் இந்த நேரடியான பஞ்ச், கத்தி படத்தின் கதி என்னவாகுமோ என்று தடுமாறிக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு பெரிய எனர்ஜியாகி இருக்கிறது. அதனால் பிரச்சினைகளை தளபதி தீர்த்து விட்டார் என்ற நம்பிக்கையில் தீபாவளிக்கு வரப்போகும் கத்தியை கொண்டாட இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள் விஜய் ரசிகர்கள்.

    0 comments:

    Post a Comment