Thursday, 18 September 2014

Tagged Under: ,

ஐ விழாவில் கலந்து கொள்ள 15 கோடி பணம் பெற்றும் ஏன் இப்படி செய்தார் அர்னால்ட். ..?

By: Unknown On: 23:02
  • Share The Gag
  • சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஐ இசைவெளியீட்டுவிழாவில் இசையை வெளியிடாமலே பாதியோடு கிளம்பிப்போனார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். அவரது வெளிநடப்பால் ஐ விழாவுக்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, திரைப்படத்துறையை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அர்னால்ட் புகழ்பெற்ற நடிகர். கலிபோர்னியா மாநில கவர்னராக இருந்தவர்.

     தவிர ஐ விழாவில் கலந்து கொள்ள 15 கோடி பணம் பெற்றிருக்கிறார். பிறகு ஏன் ஐ இசை வெளியீட்டு விழாவிலிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றார்? என்ற கேள்விக்கு பல்வேறு தகவல்கள் பதில்களாக சொல்லப்படுகிறது. ஐ விழாவுக்கு அர்னால்ட் கொடுத்தது 2 மணி நேரம் மட்டுமே..! விழா ஏற்பாட்டாளர்களின் சொதப்பல் காரணமாக பல மணி நேரம் அநியாயத்துக்கு காக்க வைக்கப்பட்டாராம் அர்னால்ட். தவிர விழாவின் இடையிடையே டெக்னிக்கல் பிராப்ளம் என்று ஏகப்பட்ட நேரத்தை சாப்பிட்டார்கள்.

    இதன் காரணமாகவே ஐ படத்தின் இசையை வெளியிடாமல் பாதியோடு கிளம்பிப்போனார் அர்னால்ட் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். தயாரிப்பாளர்கள் தரப்பிலோ வேறு காரணம் சொல்கிறார்கள், ஐ விழாவில் கலந்து கொண்ட பாடி பில்டர்களுடன் அர்னால்ட் கைகுலுக்கியபோது, சில பாடி பில்டர்கள் ஆர்வக்கோளாறில் அர்னால்டின் கையை முத்தமிட்டார்கள் என்றும், சில பாடி பில்டர்கள் அர்னால்டை கட்டிப்பிடிக்க முற்பட்டதால் அவரது உடை அழுக்காக்கப்பட்டது என்றும், அதனாலேயே கோபம் அடைந்து அர்னால்ட் கிளம்பிச்சென்றார் என்றும் சொல்கிறார்கள்.

    அதாவது அர்னால்டின் வெளிநடப்புக்கு பாடி பில்டர்கள்தான் காரணமாம். தங்கள் மீது பழியைப்போடுவதை அறிந்த பாடி பில்டர்கள் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி மீது கடும் மன வருத்தத்தில் உள்ளனர். இந்தப்பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க...விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் பாபி சிம்ஹா, அர்னால்டிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் அதனால் அர்னால்ட் கிளம்பிச் சென்றார் என்றும் சொல்கிறார்கள். இது குறித்து அர்னால்ட் ட்வீட் செய்தால்தான் உண்மை தெரிய வரும் போலிருக்கிறது? 

    0 comments:

    Post a Comment