Sunday, 29 December 2013

Tagged Under: ,

நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் திருமணம்!

By: Unknown On: 07:39
  • Share The Gag



  • நடிகை சமீரா ரெட்டி நடிகர் சூர்யாவுடன் நடித்த 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் ஏராளமான ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆவார். இவரது திருமண நிச்சயதார்த்தம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றுள்ளது.


    தனித்தனியே அனுப்பப்படும் மோட்டார் பைக்குகளின் பாகங்களை ஒருங்கிணைத்து வண்டிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர் அக்ஷய் வர்தே என்பவர். இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இவர்களை சென்ற வருடம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துவைத்தார். சமீராவிற்கும், அக்ஷய்க்கும் மோட்டார்பைக்குகளும், அவற்றில் பயணம் செய்வதும் மிகப் பிடித்தமான ஒன்றாக இருந்ததினால் அந்த விருப்பம் இருவரையும் ஒருங்கிணைத்துள்ளது.


    கடந்த 14-ம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குடும்ப விழாவாகவே அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று சமீராவின் பிறந்த நாள் என்பதுவும் இன்னொரு சிறப்பாகும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்தது.


    அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை உறுதி செய்த சமீரா இது குறித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். சமீராவின் மணமகன் கார்ப்போரேட் பின்னணியைக் கொண்டவராக இருப்பினும் திரையுலகப் பரிச்சயமும் இவருக்கு இருந்திருக்கின்றது.


    நடிகர் அக்ஷய்குமார் நடித்த 'ஓ மை காட்' திரைப்படத்தில் அவர் பயன்படுத்திய பைக்கையும், நடிகர் பாலகிருஷ்ணா தனது 'லெஜென்ட்' படத்தில் உபயோகப்படுத்திய சூப்பர் பைக்கையும் இவரது நிறுவனமே வடிவமைத்துத்தந்துள்ளது.

    0 comments:

    Post a Comment