Sunday, 29 December 2013

Tagged Under: ,

'ஜில்லா'- நடப்பது என்ன?

By: Unknown On: 23:03
  • Share The Gag



  • 'ஜில்லா' படத்தின் சென்சார் டிசமபர்.30-ம் தேதி, டிரெய்லர் டிசம்பர் 31-ம் தேதி என முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    விஜய், மோகன்லால், காஜல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஜில்லா' படத்தினை நேசன் இயக்கியிருக்கிறார். ஆர்.பி.செளத்ரி தயாரிக்க, இமான் இசையமைத்து இருக்கிறார்.

    பாடல் வெளியீடு முடிந்தாலும், படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் டீஸர் அல்லது டிரெய்லர் என எதுவுமே வெளியிடாமல் இருந்தது படக்குழு. இதனால், படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி நிலவியது.

    இத்தகவல்கள் குறித்து 'ஜில்லா' படக்குழுவினரைத் தொடர்பு கொண்டபோது, "ஜனவரி 10ம் தேதி 'வீரம்' படத்துடன் 'ஜில்லா' வெளியாவது உறுதி. படத்தின் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.

    டிசம்பர் 30-ம் தேதி படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம். அதற்கு மறுநாள், டிசம்பர் 31ம் தேதி படத்தின் டிரெய்லர் YOUTUBE தளத்தில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து படத்தினை பிரமாண்ட விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்றனர்.

    படத்தின் டைட்டில் கார்ட்டில் விஜய் பெயருக்கு முன்பாக மோகன்லால் பெயர்தான் காட்ட இருக்கிறார்கள். மோகன்லால் பெயர்தான் முதலில் வர வேண்டும். அவர் மிகப் பெரிய ஸ்டார் என்று விஜய் கூறிவிட்டதால் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்

    0 comments:

    Post a Comment