Sunday, 29 December 2013

Tagged Under: ,

இதப்படிங்க முதலில்.....!

By: Unknown On: 19:14
  • Share The Gag



  • பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி பட்டப் படிப்பு 100% வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இந்திய உணவு வகைகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகம் இருப்பதால் வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு நிறையவே உண்டு. இத்

    துறைக்கு ஆங்கில மொழித்திறன் அவசியம். கேட்டரிங் படிக்க விரும்புபவர்கள் அவசரப்பட்டு, 10-ம் வகுப்பு முடித்ததும் ஹோட்டல் டிப்ளமோ படிப்பதைவிட பிளஸ் 2 முடித்து, பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி படிப்பது சிறந்தது.

    தவிர, பி.எஸ்சி. ஆஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் என பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் ஜெனரல் ஆபரேஷன் படிப்பதன் மூலம் நட்சத்திர ஹோட்டலை நிர்வகிக்கலாம். ஃப்ரன்ட் ஆபீஸ் படித்தால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றலாம்.

     ஃபுட் பேவரேஜ் படிப்பதன் மூலம் உணவுத் தயாரிப்பு, தரக்கட்டுப்பாடு தொடங்கி விநியோகம் வரை நிர்வகிக்கலாம். ஹவுஸ் கீப்பிங் படிப்பவர்கள், ஹோட்டல் பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்கலாம். சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் படிப்பவர்கள், ஹோட்டல் வளர்ச்சிப் பணிகளை நிர்வகிக்கலாம்.

    மணிப்பாலில் வெல்கம் குரூப் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட்டில் 4 ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது. இதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. தவிர, மாநிலத்தின் ஒவ்வொரு தலைநகரத்திலும் நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை தரமணியில் இந் நிறுவனம் இயங்குகிறது. இங்கு சேர அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு உண்டு.

    என்.சி.ஹெச்.என்.சி.டி - (ஜே.இ.இ.) இணை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 5-ம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு 2014, ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 26-ம் தேதி தேர்வு நடக்கிறது. www. nchnct.org என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இந்த தேர்வு கணிதம், ரீசனிங் அண்டு லாஜிக்கல், பொது அறிவு ஆகிய பாடங்களில் தலா 30 மதிப்பெண்; ஆங்கிலம் - 60 மதிப்பெண், ஆக்டிடியூட் ஃபார் சர்வீஸ் செக்டார் - 50 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண் கொண்டது. பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 800; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 400. சென்னையில் இத்தேர்வு நடக்கும்.

    0 comments:

    Post a Comment