Tuesday, 31 December 2013

Tagged Under: , ,

பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து நீடிக்கிறது என்றென்றும் புன்னகை

By: Unknown On: 14:13
  • Share The Gag


  • ஜீவா, திரிசா, வினய் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான என்றென்றும் புன்னகை இரண்டாவது வாரமான இந்த வாரத்திலும் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் நீடித்துவருகிறது.

    ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் மற்றும் டாக்டர் ராமதாஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இப்படத்தை ஐ.அகமது இயக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    நட்பினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும்பாலான திரைவிமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்
    பெற்றிருந்தது. உணர்ச்சிப் பூர்வமான படமாகவும், தங்களது இளமைக்கால நட்பினை ஞாபகப் படுத்தும் விதமாகவும் இருப்பதாக ரசிகர்கள்
    குறிப்பிட்டுள்ளனர்.

    ரசிகர்களின் இந்த வரவேற்பால் இப்படம் இந்த வாரத்திலும் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் நீடித்துவருவதுடன், அதிகத் திரையரங்குகளிலும்
    நீடிக்கிறது. இப்படத்துடன் வெளியான வெங்கட் பிரபுவின் பிரியாணி திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் நீடித்துவருகிறது.

    கோ படத்திற்குப் பிறகு பெரும்பாலும் தோல்விகளையே கண்டுகொண்டிருந்த நடிகர் ஜீவாவிற்கு இப்படம் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

    0 comments:

    Post a Comment