Tuesday, 31 December 2013

Tagged Under:

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அழைப்பிதழ்...?

By: Unknown On: 19:29
  • Share The Gag



  • என்னுடைய கே. எம் இசைப் பள்ளியில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார்இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான்.


    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.


    அப்போது பேசிய அவர், கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம். ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது உலகளாவிய ஒரு மொழியாகும்.


    எனவே, அதை தழுவிக்கொள்ள ஒவ்வொரு இசைப் பிரியர்களுக்கும் உரிமை உண்டு.


    இந்த பள்ளியின் சர்வதேச நிர்வாகிகளிடம் கலந்துபேசி ஆலோசித்து, இங்கு கல்வி பயிலும் மாணவிகள் சென்னையில் உள்ள கே.எம்.இசைப் பள்ளியில் சேர்ந்து இசையினை பயில தேவையான அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளார்.

    0 comments:

    Post a Comment