Monday, 11 August 2014

Tagged Under: ,

கோவைக்குப் போனால் 'தூ' வென்று துப்பாதீர்கள்.. ரூ. 100 நட்டமாயிடும்..!

By: Unknown On: 20:28
  • Share The Gag
  • கோவை நகரில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. நகரைச் சுத்தமாக வைத்திருக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேயர் பொறுப்பு வகிக்கும் லீலாவதி உன்னி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகரை தூய்மையாக, சுத்தமாக வைத்திருக்கத் தேவையான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    மூச்சா போனா ரூ. 100 அபராதம்.. துப்பினாலும் 100 அதன்படி பொது இடத்தில் குப்பை கொட்டுதல், சிறுநீர் கழித்தல், எச்சில் துப்புதல், மலம் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

    நடு ரோட்டில் "கெள பாத்" எடுத்தால் ரூ. 500! பறவைகளின் தீனி கழிவுகளை ரோட்டில் கொட்டினால் ரூ.100, மாடுகளை நடுரோட்டில் குளிப்பாட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களைக் கழுவினால் ரூ. 500 மோட்டார் சைக்கிள்களை கழுவினால் ரூ.500, வேன், கார்களை கழுவினால் ரூ.500, கனரக வாகனங்களை கழுவினால் ரூ.1000.

    பாத்திரம் பண்டங்களைக் கழுவினாலும் அபராதம் சமையல் பாத்திரங்களை கழுவினால் ரூ.100, மருத்துவக் கழிவுகளை தரம் பிரிக்காமல் மாநகராட்சி குப்பைதொட்டியில் போட்டால் ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

    கூட்டம் போட்ட இடத்தை சுத்தம் செய்யாவிட்டால் குப்பைகளை உருவாக்குவோருக்கு ரூ.10 ஆயிரம், கட்டுமான இடிப்புகளை தரம் பிரிக்காமல் ஒப்படைத்தால் ரூ.25 ஆயிரம், பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை 24 மணி நேரத்தில் சுத்தம் செய்யாவிட்டால் ரூ.25 ஆயிரம் என 24 இனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளன

    1 comments:

    1. வரவேற்க பட வேண்டிய விடயம், கோவை மாநகராட்சி ஆட்சியாளர்களுக்கு பாராட்டுக்கள். இவற்றை கண்டிப்பாக பின்பற்றி கோவையை சுத்தமான நகராக மாற்ற வேண்டும். :)

      ReplyDelete