Monday, 11 August 2014

Tagged Under: ,

'பாகுபலி' என்கிற 'மகாபலி'யில் அப்படி என்னதான் நடக்குது..! பில்டப் ஓவராதான் போவுது..!

By: Unknown On: 22:42
  • Share The Gag
  • 'நான் ஈ' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் 'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக்

    கடந்திருக்கிறது. இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு சராசரியாக 100 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடப்பது வழக்கம். சில ஹிந்திப் படங்கள்தான் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும். ஆனால், தமிழ், தெலுங்கைப் பொறுத்தவரை ஒரு படத்தை ஏறக்குறைய ஒரு வருடத்திற்குள் எடுத்து முடித்து வெளியிட்டு விடுவார்கள்.

    கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பமான 'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக் கடந்தும் நடந்து வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சரித்திரக் காலப் படம் என்பதால் பிரம்மாண்டமான அரங்க அமைப்பு, ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் என இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத அளவில் படம் தயாராகி வருகிறது.

    அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் எடிட்டிங், மற்ற கிராபிக்ஸ் வேலைகள் அனைத்துமே படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததுமே உடனுக்குடன் நடந்து வருகிறது. இந்தப் படம் வெளிவந்த பிறகு தெலுங்குத் திரையுலகத்தின் இமேஜ் உலக அளவில் அதிகமாக உயரும் என தெலுங்குத் திரைப்படத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.

    அவ்வப்போது படத்தைப் பற்றிய 'மேக்கிங்' வீடியோவையும் வெளியிட்டு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள். இப்படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாகிறது.

    0 comments:

    Post a Comment