Monday, 11 August 2014

Tagged Under: ,

'ஐ' படத்துக்கு ஆப்பு வைத்த ஆசாமி..!

By: Unknown On: 23:15
  • Share The Gag
  • வந்தவரைக்கும் லாபம் என்ற மனநிலையுடன் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்ததால் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவன அதிபர் ரவிச்சந்திரனால் திட்டமிட்டபடி எந்தப் படத்தையும் சரியான நேரத்துக்கு வெளியிடமுடியவில்லை. அவரது தவறான முடிவின் காரணமாக 'திருமணம் எனும் நிக்காஹா' படம் மிகத் தாமதமாக...

    வெளியாகி தோல்வி அடைந்தது. அடுத்து அவரது கையில் இருக்கும் 'பூலோகம்' படத்தின் மீது அவருக்கே நம்பிக்கையில்லையாம். இந்த நிலையில் நம்முடைய படமும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று போராடும், இயக்குநர் ஷங்கர், இந்தப் படத்தை ரிலையன்ஸ் அல்லது வேறொரு மும்பை நிறுவனத்திடம் கைமாற்றிக் கொடுத்துவிடுங்கள் அதுபற்றி அந்நிறுவனங்களிடம் நானே பேசுகிறேன் என்றெல்லாம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவியிடம் சொல்லியிருக்கிறார்.

    முதலில் இருக்கிற சிக்கல்களுக்கு அப்படிப் படத்தைக் கைமாற்றிக்கொடுத்துவிட்டு நாலுகாசையும் பார்த்துக்கொண்டு நிம்மதியாகவும் இருக்கலாம் என்று நினைத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதுபற்றி யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னாராம். அதன் பின், நம் கைவசம் இருக்கும் ஒரே பெரிய படம் இதுதான், இந்தப் படம் நிச்சயமாகப் பெரிய வெற்றியைப் பெறக்கூடிய படமாக இருக்கும்.

    அப்படிப்பட்ட படத்தை இப்போதைய சிக்கல்களிலிருந்து மீளவேண்டும் என்பதற்காக இன்னொருவரிடம் கொடுத்துவிட்டால் இதன் மூலம் கிடைக்கும் பெருமை கிடைக்காமல் போகும். அது மட்டுமின்றி இப்போது எவ்வளவு கசப்புடன் இருந்தாலும் படம் வெளியாகி வெற்றி என்றால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறும்.

    படம் வெற்றி பெற்ற நேரத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் நாயகன் விக்ரம் ஆகிய இருவரில் யாரோ ஒருவருடைய சம்மதம் கிடைத்தாலும் அடுத்து ஒரு படத்தைத் தொடங்க வசதியாக இருக்கும், படத்தை இப்போதே கொடுத்துவிட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று யோசித்த ஆஸ்கர் ரவி, இந்தப் படத்தை நானே வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டாராம். இதனால் ஷங்கர் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

    0 comments:

    Post a Comment