Wednesday, 13 August 2014

Tagged Under: ,

மலையாள படத்தின் ரீமேக்கில் ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்..!

By: Unknown On: 18:14
  • Share The Gag
  • திருமணமாகி 8 வருடங்களுக்குப்பின், ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார். அவர் நடிக்கும் படத்தை கணவர் சூர்யாவின் சொந்த பட நிறுவனம் தயாரிக்கிறது.

    காதல் திருமணம்

    சூர்யாவும், ஜோதிகாவும் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்தார்கள். தொடர்ந்து, 'உயிரிலே கலந்தது,' 'காக்க காக்க,' பேரழகன்,' 'மாயாவி,' 'ஜூன் ஆர்,' 'சில்லுன்னு ஒரு காதல்' ஆகிய படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள்.

    அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

    மீண்டும் நடிக்கிறார்

    திருமணத்துக்குப்பின், ஜோதிகா நடிக்கவில்லை. சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு 7 வயதில் தியா என்ற மகளும், 4 வயதில் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.
    8 வருடங்களுக்குப்பின், ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார். மஞ்சுவாரியர் நடித்து, கேரளாவில் வெற்றி பெற்ற 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற மலையாள படத்தின் தமிழ் பதிப்பில் ஜோதிகா நடிக்கிறார். திருமணத்துக்குப்பின், மஞ்சுவாரியர் திரையுலகில் மறுபிரவேசம் செய்த படம் இது. இந்த படத்தில், பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு கருத்து சொல்லப்பட்டு இருக்கிறது.

    சூர்யா தயாரிக்கிறார்

    படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' மலையாள படத்தை டைரக்டு செய்த ரோஷன் ஆன்ட்ரூசே இந்த படத்தையும் டைரக்டு செய்கிறார். சூர்யாவின் '2டி' என்ற சொந்த பட நிறுவனம் தயாரிக்கிறது.

    '2டி' என்பது சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா, மகன் தேவ் ஆகியோரின் பெயர்களில் முதல் எழுத்தை கொண்டு தொடங்கப்பட்ட பட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஏற்கனவே பாண்டிராஜ் டைரக்ஷனில் ஒரு படத்தை தயாரித்து வருகிறது.

    0 comments:

    Post a Comment