Wednesday, 13 August 2014

Tagged Under: ,

ஆண்களுடன் பெண்கள் மனம் விட்டு பேசலாமா..?

By: Unknown On: 23:03
  • Share The Gag
  • தினமும் நாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களை மட்டுமே காண முடியாது. ஆண்களும்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் எப்படி அணுக வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இதோ….

    • ஆண்களின் மத்தியில் நம்முடைய நடையும், நிற்கும் ஸ்டைலும், எந்த அளவிற்கு நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம் என்பதைக் வெளிக்காட்டும். எனவே எப்பொழுதும் முதுகை நிமிர்த்தி, கழுத்தை நேராக வைத்து இருந்தால், அது தன்னம்பிக்கையுடன் இருக்கும் தோற்றத்தைத் தரும்.

    • ஆண்களை ஈர்க்க, மற்றொரு வழி நன்றியுடன் இருத்தல். சில பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு, திமிராக நடந்து கொள்வார்கள். ஆனால் அது தேவையற்றது. ஆகவே அடக்கத்துடனும், அமைதியுடனும் நடந்து கொண்டாலே போதுமானது.

    • தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள அனைவருடனும், அடக்கத்துடன் பழக வேண்டும். எல்லா விதமான மனிதர்களுடனும் பழக முடியும் என்ற நிலையை அடைய, அனைவருடனும் சகஜமாக பழக வேண்டும் என்பது மிக முக்கியம். பொதுவாக அனைவருடனும் பழகுவது என்பது, ஒருவரை முன்னோக்கி எடுத்து செல்லும். இதன் மூலம் ஆண்களிடையே, நன்றாக பழகக் கூடியவர் மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உடையவர் என்ற எண்ணங்கள் உண்டாகும்.

    • பல பெண்கள் வெளி இடங்களில் பேசுவதே இல்லை. முக்கியமாக ஆண்களிடம் பேசுவதே இல்லை. இது முற்றிலும் தவறு. தோழமையோடு பேசினால் தான் அனைவருடனும், முக்கியமாக ஆண்களிடம் தன்னம்பிக்கையுடன் பழக முடியும்.

    0 comments:

    Post a Comment