Wednesday, 13 August 2014

Tagged Under: ,

பிடிக்காத படங்களாக இருந்தாலும், தொழிலுக்கு துரோகம் செய்யமாட்டேன்..இளையராஜா ..!

By: Unknown On: 17:32
  • Share The Gag
  • சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் ‘மேகா’. இப்படத்தில் அஷ்வின் நாயகனாகவும், ஸ்ருஷ்டி நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆல்பர்ட் தயாரித்துள்ள இப்படத்தை ஜெ.எஸ்.கே நிறுவனம் வெளியிடவுள்ளது.

    இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் கார்த்திக் ரிஷி, நடிகர் அஷ்வின், நடிகை ஸ்ருஷ்டி, இசையமைப்பாள இளையராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    அப்போது இளையராஜா பேசும்போது, படத்தின் தயாரிப்பாளர் ஆல்பர்ட்டை வெகுவாக பாராட்டினார். மேலும், படத்தை சிறப்பாக இயக்கியிருப்பதாக கார்த்திக் ரிஷிக்கும் தனது ஆசீர்வாதத்தை அளிப்பதாக கூறினார்.

    தனது இசைப் பயணத்தின் அனுபவங்கள் பற்றி குறிப்பிட்ட இளையராஜா, மோசமான படங்களாக இருந்தாலும், தனக்கு பிடிக்காத படங்களாக இருந்தாலும், சரஸ்வதி தேவி தனக்குகொடுத்த இசையை சிறப்பாக அளித்து வருவதாகவும், தொழிலுக்கு என்றும் துரோகம் செய்யமாட்டேன் என்றும் கூறினார்.

    அத்துடன், கார்த்திக் ரிஷி தனது முதல் படத்தையே சிறப்பாக இயக்கியிருப்பதாக பாராட்டிய இளையராஜா, இப்படம் வெற்றியடைய ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    0 comments:

    Post a Comment