Thursday, 10 October 2013

Tagged Under:

விஞ்ஞானி பென்சிகர் ராஜன் தகவல் மங்கல்யான் விண்கலம் வரும் 29ல் விண்ணில் ஏவப்படும்!

By: Unknown On: 11:40
  • Share The Gag



  • குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக விண்வெளி வாரவிழா நடைபெற்றது.  விழாவில் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி பென்சிகர் ராஜன் பேசியதாவது, 


    மங்கல்யான் விண்கலம் வரும் 29ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இது அதன் சுற்றுவட்டப்பாதையை சென்றடைய சுமார் 300 நாட்கள் ஆகும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதா? நீர்ப்பரப்பு இருக்கிறதா என  ஆய்வு செய்யும். மீத்தேன் வாயு இருந்தால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்புண்டு. 


    இந்தியா அனுப்பியுள்ள ஐஆர்எஸ் என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் காடு, மீன், கனிமவளங்கள் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.  70 நாடுகள் இணைந்து ஐநா சபை ஒப்புதலுடன் உலகம் முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

    0 comments:

    Post a Comment