Thursday, 10 October 2013

Tagged Under: , ,

கூகுள் Chromebooks அக்டோபர் 17 முதல் இந்தியாவில் அறிமுகம்!

By: Unknown On: 20:10
  • Share The Gag


  • கூகுள் நிறுவனம் அக்டோபர் 17 முதல் Chromebooks இந்தியாவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. Chromebooks-இல் மைக்ரோசாப்ட் விண்டோஸ்-க்கு பதிலாக கூகுள் Chrome OS மூலம் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் HP மற்றும் Acer தங்களது Chromebooks விற்பனையை இந்திய சந்தையில் தொடங்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.


    அக்டோபர் 17 முதல் வாடிக்கையாளர்கள் Acer C720 அல்லது HP Chromebook 14 வாங்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. Acer C720 ரூ.22.999 விலைக்கும் மற்றும் HP Chromebook 14 ரூ.26.990 விலைக்கு கிடைக்கும். விண்டோஸ் உடன் Chrome OS ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அது light மற்றும் web-based சார்ந்த பணிகள் இன்னும் பொருத்தமானதாக இருக்கும் மற்றும் Chromebook-ஐ இண்டர்நெட் உடன் இணைக்கப்படும் போது சிறப்பாக செயல்படுகிறது.



    விண்டோஸ் கணினிகளில் இயங்கக்கூடிய புரோகிராம்கள் அனைத்தும் Chromebooks-இல் இயங்காது. Chromebooks-இல் வேகமாக பூட் செயல்திறன், போர்டபிளிட்டி மற்றும் சிறந்த பேட்டரி ஆயுள் அமைந்துள்ளது. Chromebooks இல் இருந்து விஷயங்களை வேகமாக மற்றும் எளிதாக செய்ய உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது. Chrome OS இயக்கப்படும் போது ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் பாதுகாப்பிற்காக மல்டிபுள் லேயர்ஸ்(multiple layers), கிளவுட் சேமிப்பு கொண்டுள்ளது.

    C720:

    C720 Haswell architecture அடிப்படையில் இன்டெல் செலரான் 2955U செயலி மூலம் இயக்கப்படுகிறது. திரை 11.6 இன்ச் மற்றும் 1.25kg எடையுள்ளதாக இருக்கிறது. 2GB ரேம் மற்றும் 16GB SSD சேமிப்பு உள்ளது. 8.5 மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது.

    Chromebook 14:


    Chromebook 14 இன்டெல் செலரான் 2955U மூலம் இயக்கப்படுகிறது. 14 இன்ச் திரை மற்றும் 1.85kg எடையுள்ளதாக இருக்கிறது. இது 16GB SSD மற்றும் 4GB ரேம் உள்ளது. 9.5 மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. 




    0 comments:

    Post a Comment