Thursday, 17 July 2014

Tagged Under: , , , , ,

பெண்களின் உடலைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்!!!!

By: Unknown On: 22:04
  • Share The Gag


  • பெண்களின் உடலைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்!

    தொன்றுதொட்டே ஆய்வுகள் அனைத்தும் ஆண்களை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இருபாலினத்தவரையும் பாதிக்கக்கூடிய புற்றுநோய்க்கான முக்கியமான சில மருத்துவ முன்னோட்டங்களில் பெண்களுக்கு மிகக் குறைவான பிரதிநிதித்துவமே அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.


     குழந்தை வளர்ப்பு சார்ந்த பிரச்சனைகள் முதற்கொண்டு பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வயது தொடங்கி பரிசோதனை முயற்சியாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வரையிலானவை பற்றிய விழிப்புணர்வை பெண்களிடையே பரப்புவதில் ஆய்வாளர்கள் காட்டும் தயக்கம் வரையிலான பல விஷயங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


    பெண்களின் உடல்நலக் கோளாறுகள் தொடர்பான, ஆய்வுகள் அவ்வளவாக மேற்கொள்ளப்படாத, இதர பிரிவுகளில், பிரச்சனைக்குரியது பாலுணர்வு மட்டுமே அல்ல. பெண்களின் ஹார்மோன் சுரப்புகளின் ஏற்ற இறக்கங்கள் சிக்கலானவை. அவை அடிப்படையான சில கண்டுபிடிப்புகளையும் குழப்பிவிடக்கூடியவை. ஆனால் சமீபத்திய வருடங்களில், பெண்களின் மீதான கவனம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    என்றாலும், இப்போதும் கூட பெண்களின் உடற்கூறைப் பற்றிய தவறான தகவல்களே சமூகத்தில் உலவி வருகின்றன. இங்கு பெண்ணின் உடற்கூறு பற்றிய கட்டுக்கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா!!

    கட்டுக்கதை 1

    ஒரு பெண் கன்னி தானா என்பதை ஒரு மருத்துவரால் கண்டறிய முடியும்.

    10 மடிப்பு கொண்ட உருத்தோற்றப் பெருக்கியை உபயோகித்து சோதித்தாலும் கூட, மருத்துவர்களால் கன்னிப்பெண்களை, ஏற்கெனவே பாலுறவு கொண்டிருக்கக்கூடிய பெண்களிடம் இருந்து வேறுபடுத்த இயலாது என்று பல்வேறு ஆய்வுகளும் இடித்துரைக்கின்றன. கன்னித்திரையில் ஓட்டை இருக்கிறதா என்று பார்த்து சுலபமாக சொல்லி விட முடியாது, ஏனெனில் கன்னித்திரையில் ஓட்டை இருக்கவே செய்யும்


    .
    "கன்னித்திரையானது, பெண்ணின் பிறப்புறுப்பை மூடி இருக்கும் (கன்னித்தன்மையை இழக்கும் வரை) என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள்; ஆனால், இது முற்றிலும் தவறான எண்ணமாகும்", என்று இந்தியானா யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்தவரும், கரோலுடன் இணைந்து "டோன்ட் ஸ்வால்லோ யுவர் கம்."-இல் இணை ஆசிரியராகப் பணியாற்றியவருமான டாக்டர்.ரேச்சல் வ்ரீமன் கூறுகிறார். மிக அரிதாக அவ்வாறு கன்னித்திரை பிறப்புறுப்பை மூடியிருக்கும் பட்சத்தில், மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய இரத்தப்போக்கு, கர்ப்பப்பையில் தேங்கி, மிக மோசமான உடல்நலக் கோளாறுகளை உருவாக்கிவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

    கட்டுக்கதை 2

    ஆன்டிபயாட்டிக் மருந்துகள் குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகளின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன.

    "மருத்துவர்கள் பலரே இந்தக் கதையை நம்புகின்றனர்," என்று கரோல் கூறுகிறார். குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகளை தனியாக உட்கொள்ளும் போது, அவை செயல்படாமல் போகக்கூடிய வாய்ப்பு ஒரு சதவீதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளுடன் எடுத்துக் கொண்டாலும் கூட இந்த விகிதத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் கரோல் குறிப்பிட்டுள்ளார்.



    காசநோய்க்கென பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்கான ரிஃபாம்பின் என்ற மருந்து மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடும். குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் முடுக்கிவிடக்கூடிய கர்ப்பத் தடை ஹார்மோன்களின் அளவை ரிஃபாம்பின் குறைக்கும்; என்றாலும் கர்ப்பம் தரிக்கும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடிய அளவுக்கு இதன் தாக்கம் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரிஃபாம்பின் பற்றிய ஆய்வே ஆன்டிபயாட்டிக்/குடும்பக் கட்டுப்பாடு வதந்தியை கிளப்பியிருக்கலாம் என்று கரோல் எண்ணுகிறார். "சில நேரங்களில் மக்கள் எதையாவது சொல்லப்போக, அது அப்படியே காட்டுத்தீ போல பரவி விடுகிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.

    கட்டுக்கதை 3

    பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான அளவு உறக்கமே தேவைப்படுகிறது.

    திரும்பித் திரும்பி புரண்டு படுப்பது பெண்களுக்கு மனச்சோர்வை உண்டாக்குவதோடு, அவர்களின் இன்சுலின் மற்றும் அழற்சியின் அளவுகளை உயர்த்தி, பல வித உடல்நலக்கோளாறுகளையும் உண்டாக்கும் என்று ட்யூக் யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்த எட்வார்ட் சுவாரெஸ் அவர்களின் தலைமையின் கீழ் 2008 ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்ட சுமார் 210 பேர் அடங்கிய குழு கண்டுபிடித்துள்து.

    சுமார் 6,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன், வார்விக் யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்த ஆய்வாளர்களின் வழிகாட்டுதலுடன் 2007 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரமே உறங்கும் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படக்கூடிய வாய்ப்பு, ஏழு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் உறங்கும் பெண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது.

    ஆண்களிடையே, இத்தகைய ஒப்பீடுகள் ஏதும் இருப்பது போல் தெரியவில்லை. எனவே உறங்கும் தேவதைகள் தமக்கு விழிப்புத் தட்டிய பின் எழுவதே அவர்களின் உடல்நலத்துக்கு நல்லது.

    கட்டுக்கதை 4

    இறுதி மாதவிடாய்க்கு பின் பாலுறவில் நாட்டம் இருக்காது.

    இறுதி மாதவிடாயினால் படுக்கையறை பழக்கவழக்கங்களில் மட்டுமே மாற்றம் காணப்படும் என்று கூற முடியாது. அமெரிக்காவைச் சேர்ந்த எட்வார்ட் லௌமன் அவரது சகாக்களுடன் இணைந்து 1994 ஆம் ஆண்டில் மேற்கொண்ட பாலுறவு பழக்கவழக்கங்கள் பற்றிய விரிவான சர்வேயில், ஐம்பதுகளில் உள்ள பெண்களில் ஏறத்தாழ பாதிப்பேர் ஒரு மாதத்தில் பலமுறை பாலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.



    இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகளுள் ஒன்றான ஜுரம் மற்றும் இதர தொந்தரவுகள் தற்காலிகமாக பெண்களுக்கு பாலுறவில் நாட்டமின்றிப் போகச் செய்யலாம். ஆனால் பாலுறவு சார்ந்த நாட்டத்திற்கும், இறுதி மாதவிடாய்க்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று வ்ரீமன் கூறியுள்ளார். அதனால் உங்களுக்கு இறுதி மாதவிடாய் ஏற்பட்டிருந்தால், நீங்கள் பாலுறவுக்கு டாட்டா காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

    கட்டுக்கதை 5

    மாதவிடாயின் போது ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாது.

    மாதவிடாயின் போது ஒரு பெண் கர்ப்பம் தரிக்கக்கூடிய சாத்தியம் இல்லை தான்; என்றாலும், கர்ப்பம் தரித்தல் என்று வரும் போது, எதுவும் சாத்தியமே" என்று இந்தியானா யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்தவரும், "டோன்ட் ஸ்வால்லோ யுவர் கம்: மித்ஸ், ஹாஃப்-ட்ரூத்ஸ் அண்ட் அவுட்ரைட் லைஸ் அபவுட் யுவர் பாடி அண்ட் ஹெல்த்" (செயின்ட்.மார்டின்'ஸ் க்ரிஃபின், 2009) -இன் இணை ஆசிரியருமான ஆரோன் கரோல் கூறியுள்ளார்.

    ஒரு பெண்ணின் உடலுக்குள் சென்றடைந்த பின், ஆணின் விந்தணு, சினை முட்டைக்காக சுமார் ஒரு வார காலம் வரை காத்திருக்கும். சினை முட்டை வெளியேற்றம் உடனேயே நிகழலாம் அல்லது பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது இரத்தப்போக்கு இருக்கும் காலத்திலும் கூட நிகழ்ந்து, பொறுமையாக காத்துக் கொண்டிருக்கும் விந்தணுவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.


     குடும்பக்கட்டுப்பாட்டிற்கான காலதிட்ட அமைப்பு, சரிவர செயல்படுவது இல்லை என்று கூறும் கரோல், இத்திட்ட அமைப்பை கடைப்பிடிக்கும் தம்பதியர் பல நேரங்களில் பெற்றோர் ஆகிவிடுவதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    0 comments:

    Post a Comment