கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் அல்லது கட்டுரைகளை தவற விடும் வாய்ப்பும் இல்லை.
இமெயிலில் சந்தாதாரவது சுலபமாகவும் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் இமெயில்ல் வரும் தகவல்கள் சுமையாகவோ , இடைஞ்சலாகவோ மாறிவிடலாம். திடிரென முகவரி பெட்டியில் மெயில்களாக குவிந்து அவற்றை படிக்க முடியாமல் திண்டாடும் போது இமெயில் சந்தாக்களில் வரும் தகவல்கள் அதிருப்தியை தரலாம்.
ஆனால் நல்ல வேளையாக இமெயிலில் புதிய தகவல்களை பெற சம்மதம் தெரிவிப்பது போலவே, இனி தேவையில்லை என்று சொல்வதும் சுலபமானது தான். இதற்காகவே சந்தா விலக்கல் (அன் சப்ஸ்கிரைப் ) வசதி இருக்கிறது. இமெயில் செய்தியில் எந்த இடத்தில் இந்த வசதிக்கான ஐகான் இருக்கிறது என் பார்த்து கிளிக் செய்தால் மெயில் வரத்து நின்று போகும். இருந்தாலும் பல நேரங்களில் இந்த சந்தா விலக்கல் வசதி எங்கிருக்கிறது என்று தெரியாமலும் திண்டாடலாம். அது மட்டும் அல்லாமால் மெயிலை திறந்து அந்த வசதியை தேர்வு செய்து கிளிக் செய்வதற்கு அலுப்பாக இருக்கலாம். சந்தா சேவையே ஒரு வகையில் சோம்பலுக்கான தீர்வு தானே. அதே சோம்பல் சந்தா வேண்டாம் எனும் வசதியை தேடி கிளிக் செய்யவும் தடையாக இருக்கலாம்.
எது எப்படியோ, இமெயில் சந்தாவில் இருந்து விலகுவதற்கான சுலபமான வழியை ரிமூவ் மீ இணையதளம் வழங்குகிறது. இமெயில் முகவரி பெட்டியை ஒரே கிளிக்கில் தேவையில்லாத மெயில்களில் இருந்து விடுவிக்க வழி செய்வதாக சொல்லும் இந்த தளம், இனியும் வேண்டாம் என நினைக்கும் சந்தாவில் இருந்து விடுபட சுலபமான வழியை முன்வைக்கிறது. அதுவும் எப்படி தெரியுமா? குறிப்பிட்ட அந்த சேவையில் மெயிலை திறக்கமாலேயே ஒரே கிளிக்கில் அதற்கு குட்பை சொல்ல வைக்கிறது. எப்படி என்றால் , முகவரி பெட்டியில் அந்த மெயிலுக்கு அருகிலேயே அதற்கான வசதியை காண்பிக்கப்படுகிறது. அதில் ஒரு கிளிக் ,அவ்வளவு தன இனி அந்த மெயில் வராது.
இமெயில் சந்தாக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் ரிமூவ் மீ பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு முன் இதை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
சந்தா விலக்க சேவையுடன் , இமெயில் சர்பார்ப்பு சேவையையும் இந்த தளம் வழங்குகிறது . அதாவது குறிப்பிட்ட இமெயில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தான் வந்திருக்கிறதா இல்லை ஏதேனும் விளம்பர அல்லது ஏமாற்று மெயிலா என்பதை இது உறுதி செய்கிறது.உதாரணமாக பேஸ்புக்கில் இருந்து ஒரு அப்டேட் வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த மெயிலுக்கு அருகே அந்த நிறுவன லோகோ தோன்றுவதை பார்த்து பேஸ்புக் மெயில் தான் என உறுதி கொள்ளலாம்.
ரிமூவ் மீ சேவையை வழங்குவது பவர் இன்பாக்ஸ் எனும் நிறுவனம். பவர் இன் பாகஸ் நிறுவங்களின் இமெயில் தகவல்களை மேலும் சிறந்த வழியில் பெற வழி செய்கிறது. கிட்டத்தட்ட இதுவும் இமெயிலுக்கான சந்தா சேவை போல் தான். இமெயில் சந்தா சேவை வழங்கும் ஒரு நிறுவனமே சந்தா விடுபடல்சேவை வழங்குவது அழகான முரண் தான். இது ஒருபுறம் இருக்கட்டும், பவர் இன்பாக்ஸ் சேவையை பயன்படுத்தினால் பேஸ்புக் மறும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் இருந்தே இயக்கலாம். அதாவது , பேஸ்புக் அல்லது டிவிட்டர் சேவைக்கான வசதி மெயிலுக்கு அருகே தனியே தோன்றுகிறது. ஆக மெயிலில் இருந்து விலகிச்செல்லாமலேயே பேஸ்புக்கை அப்டேட்டை சரி பார்க்கலாம்.
இணையதள முகவரி; http://powerinbox.com/
0 comments:
Post a Comment