Thursday, 17 July 2014

Tagged Under: ,

தொடங்கியது சூர்யாவின் மாஸ்..!

By: Unknown On: 18:28
  • Share The Gag
  • அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் மாஸ். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், மற்ற டெக்னீஷியன்களும் வெங்கட்பிரபுவின் வழக்கமான கூட்டணி தான்.

    இப்படத்தின் ஷூட்டிங் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில் சூர்யா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், தொடர்ந்து காரைக்குடி உள்ளிட்ட பிற நகரங்களிலும் சில காட்சிகளை வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

    0 comments:

    Post a Comment