Saturday, 30 August 2014

Tagged Under: ,

சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் இயக்குநர்

By: Unknown On: 20:42
  • Share The Gag
  • நடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கன்னட இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

    கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராவ். சமீபத்தில் கன்னட செய்தி சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேசனின்போது, செக்ஸ் விவகாரங்களில் இவர் வீக்கானவர் என்பது அம்பலமானது.

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பது போல ஒரு பெண்ணை அனுப்பி, ரகசிய கேமரா மூலமாக ஓம் பிரகாஷ் நடவடிக்கைகளை பதிவு செய்தபோது, அவர், அந்த பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா என்று கேட்பது பதிவானது. மேலும் இதற்கு முன்பு பல நடிகைகளுடன் இவ்வாறு செய்த பிறகுதான் அவர்களுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததாகவும் அவர் 'ஒப்புதல் வாக்குமூலம்' அளித்ததும் அதில் பதிவானது.

    இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கன்னட சேனலில் காண்பிக்கப்பட்டதும் திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இந்த ஒரு இயக்குநர் மட்டுமின்றி மேலும் சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் செக்ஸ் ஒப்பந்தத்தையும் அந்த சேனல் அம்பலப்படுத்தியது.

    இதில் ஓம்பிரகாஷ் ராவ் மட்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். "எனது தவறான நடத்தைகளுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் இந்த விஷயத்தில் குற்றவாளிதான்" என்று கூறியுள்ளார்.

    0 comments:

    Post a Comment