விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் ரூ.180 கோடி செலவில் தயாராகியுள்ளது. ஷங்கர் பிரமாண்ட படமாக இதை இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சைனீஸ், தைவான் உள்ளிட்ட பல மொழிகளில் ‘ஐ’ படம் வெளியிடப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்படுகின்றன.
‘ஐ’ படத்தின் தமிழ், தெலுங்கு பாடல்கள் வெளியிட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது. ‘ஐ’ தமிழ் பட பாடல் வெளியீட்டு விழாவை சென்னையிலும் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவை ஐதராபாத்திலும் நடத்துகின்றனர்.
தமிழ் பாடல்களை ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு வெளியீடுகிறார். தெலுங்கு பாடல்களை ஜாக்கிசான் வெளியீடுகிறார்.
ஆஸ்கார் பிலிம்ஸ் பட இணை தயாரிப்பாளர் ரமேஷ்பாபு நேரில் சென்று அர்னால்டுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது ‘ஐ’ படத்தில் விக்ரம் நடித்த சில காட்சிகளை அவருக்கு காட்டினார். 100 கிலோவரை எடையை கூட்டியும், 50 கிலோவரை குறைத்தும் இந்த படத்தில் விக்ரம் நடித்து இருப்பதை பார்த்து அர்னால்டு வியந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறாரே என்று விக்ரம் நடிப்பை பாராட்டினாராம். பாடல் வெளியீட்டு விழாவுக்கு கண்டிப்பாக வருவேன் என்று உறுதி அளித்துள்ளார்.
அர்னால்டு பங்கேற்கும் இந்த விழாவில் ரஜினி, கமலும் கலந்து கொள்கிறார்கள். பாடல்களை அர்னால்டு வெளியிட ரஜினியும், கமலும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர். அர்னால்டு பங்கேற்கும் விழா என்பதால் தமிழ் திரையுலகின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் விழாவுக்கு அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

0 comments:
Post a Comment