Saturday, 30 August 2014

Tagged Under: ,

தன்னை தானே செதுக்கியவர்கள்!

By: Unknown On: 17:02
  • Share The Gag
  • தமிழ் சினிமா என்பது சாமனிய மக்களுக்கு ஒரு நிழல் உலகம் தான். அதை நிஜ உலகத்திற்கு கொண்டு வந்தவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இந்த களத்தில் வெற்றி பெறுவது, தண்ணீரில் நடப்பதற்கு சமம். அப்படி தன்னை தானே செதுக்கி திரையுகில் வெற்றி பெற்றவர்களின் தொகுப்பு தான் இந்த பகுதி.

    எம்.ஜி.ஆர்

    ஒரு மலையாளியாக இருந்து தமிழ் திரையுலகில் வெற்றி பெற சென்னை வந்தவர். சினிமாவில் இவர் முகத்தை காட்ட அடைந்த கஷ்டங்களை வார்த்தையாலும், வரிகளிலாலும் சொல்லமுடியாதவை. ஆனால் இவரின் கடின உழைப்பால் சினிமாவை தாண்டி தமிழக அரசியலிலும் யாரும் நிரப்பு முடியாத முதலமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவாஜி

    தஞ்சாவூரில் பிறந்து வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்த அவருக்கு சினிமாவின் மீது திடீரென்று காதல் ஏற்பட்டது. சென்னை வந்து பல நாடக கம்பெனிகளில் வேலை பார்த்து, பின் பல நாடகங்களில் நடித்து கலைஞரின் கைவண்ணத்தில் வெளிவந்த பராசக்தியில் சக்சஸ் என்ற வசனுத்துடன் ஆர்ம்பித்து, தன் வாழ்நாள் இறுதி வரை தமிழ் சினிமாவில் சக்சஸ் ஆனவர்.

    ரஜினி

    ’சில மனிதர்கள் ஆச்சரியங்களை நம்புவதில்லை, சாதரண பஸ் நடத்துனர் இன்று சூப்பர் ஸ்டார், அதனால் ஆச்சரிங்கள் இருக்கிறது நான் நம்புகிறேன்’ என்று அவரே ஒரு விருது விழாவில் கூறினார். முதல் முதலாக ஹீரோயிஸித்திற்கான அத்தனை வரைமுறைகளையும் உடைத்து வெற்றி பெற்றவர் இவர் தான்.

    விஜயகாந்த்

    மதுரைக்கும் தமிழ் சினிமாவிற்கும் என்றுமே ஒரு தொடர்பு இன்று வரை இருந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் மதுரை மண்ணில் இருந்து சென்னை வந்து வெற்றி பெற்றவர்களில் மிகவும் முக்கியமானவர் விஜயகாந்த். ரஜினிக்கு பிறகு கருமை தேகத்துடன் வெற்றி கொடிகட்டியவர். மேலும் இவரின் எதார்த்தமான முகம் தமிழக கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

    அஜித்

    சிறிய மெக்கானிக்காக தன் வாழ்க்கையை தொடங்கி, பின் சில டெக்ஸ்டைல் கம்பெனிகளில் வேலை பார்த்து, மாடலிங் துறைக்கு வந்தவர் அஜித். இவர் ஆரம்பத்தில் நடித்த பல படங்கள் தோல்வியை தந்தாலும், இவரின் தனிப்பட்ட குணத்திற்காகவே இவருக்கு அதிக ரசிகர் வட்டம் வந்தது. இன்றைய இளம் ஹீரோக்கள் மட்டுமில்லாமல் இளைஞர்கள் நிறைய பேருக்கு இவர் ரோல் மாடலாக விளங்குகிறார்.

    மாதவன்

    சின்னத்திரை பிரபலமாக தொலைக்காட்சியில் தோன்றி, இன்று வெள்ளித்திரை நாயகனாக வலம் வருகிறார் மாதவன். இன்றும் இவரது சிரிப்பிற்கு மயங்காத பெண்களே இல்லை.

    விக்ரம்

    இவருடைய அப்பா சினிமாவில் இருந்தவர் தான், ஆனால் அதை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் முழுக்க, முழுக்க தன் முயற்சியை மட்டும் நம்பி பல வருட போராட்டத்திற்கு பிறகு பாலாவின் கண்ணீல் பட்டு சேதுவாக மறுபிறவி எடுத்தார். சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுக்கு பிறகு அந்த வரிசையை நிரப்பியவர் இவர் தான்.

    சிவகார்த்திகேயன்

    எந்த ஒரு சினிமா பின் பலமும் இல்லாமல் தன்னிடம் இருக்கும் திறமையை மட்டும் நம்பி, சின்னத்திரையில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தன் வாழ்க்கையை தொடங்கி, இன்று முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

    விஜய்சேதுபதி

    துபாயில் சொல்லிகொள்ளும் படி நல்ல வேலையில் இருந்து சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், அந்த வேலையையும் விட்டு கோடம்பாக்க வாசலிலேயே நின்றவர். தூக்கிவிடுவதற்கு எந்த சப்போர்ட்டும் இல்லாமல், தன் சொந்த முயற்சியால் மட்டுமே இன்று மினிமம் கேரண்டி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

    சினிமாவில் இருப்பவர்களே தான் சினிமாவிற்கு வரவேண்டும் என்ற நிலை மாறி, சாமனியனுக்கும் கோடம்பாக்க வாசல் திறந்திருக்கும், நாம் நம் முயற்சியில் உண்மையாக இருந்தால் வெற்றி தேடி வரும் என்பதற்கு இவர்களே உதாரணம்.

    0 comments:

    Post a Comment