நடிகர் கமல்ஹாசன் வழியை பின்பற்றலாமே என்று முன்னணி நடிகர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் யோசனை தெரிவித்துள்ளார்.
சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, அனைகா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'காவியத்தலைவன்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஃபேஸ்புக் இணையத்தில் எப்போதும் தீவிரமாக இயங்கும் இயக்குநர் வசந்தபாலன், தற்போது கமல்ஹாசனைப் பற்றி ஒரு நிலைத்தகவலை வெளியிட்டுள்ளார்.
"இன்று தற்செயலாக கமல்ஹாசன் அவர்களின் imdp யை நோண்டிக்கொண்டிருந்தேன். தன் காலத்தில், கமல் அவர்கள் ஒரு பக்கா கமர்சியல் படத்திற்கு நடுவே நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ஒரு தரமான அழகான கலையம்சம் கொண்டு க்ளாஸிக் படத்தையும் பண்ணியுள்ளார்.
அந்த படங்கள் தான் கமல் அவர்களை வளர்த்தது. மற்றவர்களில் இருந்து அவரை பிரித்து காட்டியது. இன்றுவரை நடிகர் கமல் அவர்களை பற்றி நம்மை பேச வைத்துள்ளது. அவருடைய நடிப்புத்திறமையையும் வெளியே கொண்டு வந்துள்ளது. நடிகர் திலகத்திற்கு பிறகு உலக நாயகன் தான் என்று சொல்ல வைத்தது.
1982 மூன்றாம்பிறை \ சகலகலாவல்லவன்
1983 தூங்காதே தம்பி தூங்காதே\ சலங்கை ஒலி
1984 ஒரு கைதியின் டைரி\ ஜப்பானில் ஒரு கல்யாணராமன்
1985 காக்கி சட்டை \ சிப்பிக்குள் முத்து
1986 விக்ரம்\ புன்னகை மன்னன்
1987 நாயகன் \ வெற்றி விழா \ காதல் பரிசு
1992 தேவர் மகன்\ சிங்காரவேலன்
1993 கலைஞன் \ மகராசன்\ மகாநதி
1996 குருதிப்புனல்\ இந்தியன் \ அவ்வை சண்முகி
இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தமிழ் கதாநாயகர்கள் கமல் அவர்களின் வழியை பின்பற்றினால் நமக்கு கமர்சியல் படங்களும் கிடைக்கும், நல்ல படங்களும் கிடைக்கும். அவர்களும் நடிப்புத்திறமையை நிருபிக்கக்கூடிய படங்களில் நடித்தது போல் ஆகிவிடும்.
பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் யார் கமல் அவர்களை பின்பற்றுகிறார்கள்." என்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.