Wednesday, 24 September 2014

கமலின் உத்தமவில்லன் நவம்பர் 7-ல் வெளியீடு

By: Unknown On: 20:16
  • Share The Gag
  • கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை வரும் நவம்பர் 7-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ‘உத்தமவில்லன்’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு காலக்கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயராம், நாசர், இயக்குனர் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், பார்வதி மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தொடர்ந்து கமல் தற்போது ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக, கமல் நடித்து முடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தை அடுத்த வருடம் ஜனவரியில் வெளியிடவுள்ளனர். 

    பாதியில் ஓடியவர் எல்லாருக்கும் கடிதம் அனுப்புகிறார்..!

    By: Unknown On: 20:07
  • Share The Gag
  • சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார்.

    பின்னர், ஐ ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய அர்னால்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் பணிகளை பாராட்டி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் நான் சென்னை வந்தபோது எனக்கு சிறப்பான பாதுகாப்பு வசதி செய்து தந்ததற்கும், என்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் அமர்ந்து நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றியும், உங்களது சாதனைகள் குறித்தும் விவாதித்தது அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்துவரும் சேவை என் மனதை தொட்டது. தமிழக மக்கள் உங்களை அம்மா என்று அழைப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அனைத்து பெண்கள் காவல் நிலையம் என்பது மிகவும் சிறப்பான திட்டம். இதுபோன்ற செய்தியை நான் எங்கும் கேட்டதுகூட இல்லை.

    இந்தியாவில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தில் தமிழகம் 39 சதவிகித உற்பத்தி செய்ய நீங்கள் எடுத்துள்ள முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது. காற்று மாசுபடுவதை தடுக்கும் உங்கள் முயற்சியில் நாங்களும் இணைய விரும்புகிறோம். நீங்கள் செய்துள்ள இம்முயற்சியை நான்கு வருடங்களுக்கு முன் நான் சார்ந்துள்ள கலிபோர்னியா மாகாணத்திலும் தொடங்கியுள்ளேன்.

    எனது இந்த முயற்சியில் 560 நகரங்களும் பல்வேறு மாகாணங்களும் இணைந்துள்ளன. எங்களுடன் நீங்களும் இணைந்து செயல்பட விரும்புகிறேன். எனது அதிகாரிகளை உங்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். ஏனென்றால் நமது செயல்பாடு வெறும் பேச்சோடு நின்று விடக்கூடாது.

    இதுபோன்ற தொடர்புகள் மூலம் நாம் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். மிகவும் நன்றி. உங்களது சிறப்பான பணிகள் தொடர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

    கோயல் கட்டலாம..? வேணாமா..? நயன்தாரா காரசார விளக்கம்..!

    By: Unknown On: 11:30
  • Share The Gag
  • தமிழ் ரசிகர்கள் குஷ்புக்கு ஏற்கனவே கோவில் கட்டி அன்பை வெளிப்படுத்தினர். அக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூசாரியை வைத்து பூஜை அர்ச்சனை வழிபாடுகளும் நடத்தப்பட்டன. நக்மாவுக்கும் கோவில் கட்டினர். இது போல் நயன்தாராவுக்கு கோவில் கட்ட தற்போது ஏற்பாடுகள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்கள் இணைந்து இக்கோவிலை கட்டிடுகிறார்கள். இடம் தேர்வு நடக்கிறது.

    கோவில் கட்டுவதற்கு நயன்தாரா விடமும், அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நயன்தாரா இதற்கு சம்மதிக்க வில்லை. கோவில் கட்ட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து நயன்தாரா கூறும்போது:–

    ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு போதுமானது. இதற்கு மேல் எதையும் நான் எதிர் பார்க்க வில்லை.

    எனக்கு கோவில் கட்டும் செயலில் ஈடுபடாதீர்கள் என் வேண்டுகோளையும் மீறி கோவில் கட்டினால் அது மன அமைதியை கெடுப்பதாக இருக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.

    தமிழ், தெலுங்கு, திரையுலகில் நயன்தாரா தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கிறார். புது கதாநாயகிகளை வரத்து அவர் மார்க் கெட்டை அசைக்க வில்லை.

    விஞ்ஞானி பார்த்தியின் புது சோதனை வெற்றி பெறுமா..? காத்திருப்போம்..!

    By: Unknown On: 10:44
  • Share The Gag
  • நடிகர் பார்த்தி விஞ்ஞானி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். இந்த பொழுது போக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கியும் உள்ளார். பார்த்திக்கு சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரிப் படிப்பு. அழகப்பா செட்டியார் தொழில் நுட்ப கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றவர். அறிவியல் மீது தீராத ஆர்வம் கொண்ட பார்த்தி, தனது உயர் கல்வியை இந்திய அறிவியல் நிறுவனத்தில் பயின்று, அங்கு விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

    பார்த்தியின் கனவுகள் அனைத்தும் மிகப்பெரியது. சர்வதேச புகழ்பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்ற விரும்பினார். அந்த பெருமைமிகு நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த விரல்விட்டு எண்ணக்கூடிய விஞ்ஞானிகளில் பார்த்தியும் ஒருவர்.

    நாசாவில் பார்த்தியும் அவரது குழு உறுப்பினர்களும் ஓசோன் படலம், பருவ நிலை மாற்றம் போன்றவை குறித்து  தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது தொடர்பான கண்டுபிடிப்பிலும் இறங்கினர். இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், பார்த்தி, பயோடெக்னாலஜி ஆய்வுத் துறையில் வர்த்தக ஆலோசகராக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் 2008 ஆம் ஆண்டு அறிவியல் ஆய்வு அடிப்படையிலான சொந்த நிறுவனத்தை உருவாக்கினார்.

    அறிவியல் ஆய்வுத்துறையில் இருந்த பார்த்தி தனது நீண்டகால கனவான கலைத்துறைக்கு மாற முடிவு செய்தார்.
    தனது பள்ளி நாட்களில் பார்த்தி நடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர். கல்லூரி காலகட்டத்தின்போது, கலை நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டு தனது திறமையை வளர்ப்பதில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டியவர்.

    இந்த புது முயற்சியில் அறிவியலையும், நடிப்பையும் ஒன்றாக இணைக்க முடிவு செய்தார். விஞ்ஞானி தொடர்புடைய கதையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே, அவரது திரைப்படத்துக்கு விஞ்ஞானி என்று பெயர் சூட்டினார். தமிழ் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி பெறுவதே தன்னுடைய நோக்கம் என்று கூறுகிறார்.

    ‘விஞ்ஞானி’ திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நடிகர்கள். நடிகை மீராஜாஸ்மின் பட நாயகி. நடிகர்கள் விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி போன்றோரும் இதில் நடித்துள்ளனர். நடிகை சஞ்சனா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கிமாயா சினேகா இந்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

    மாரிஸ் விஜயின் இசையில், பார்த்தி உருவாக்கி உள்ள இந்த திரைப்படத்தின் இசை வரும் இன்று பிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்படுகிறது. 

    பாரதிராஜா பாராட்டால் துள்ளி குதிக்கும் இளம் இசை புயல்..!

    By: Unknown On: 10:19
  • Share The Gag
  • சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை கார்த்திக் சுபாராஜ் இயக்கியிருந்தார். சித்தார்த்-லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருந்த இப்படத்தில் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் அனைவரிடையே அதிகம் பேசப்பட்டது. ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

    இப்படம் வெளியான நாளில் இருந்து, படம் குறித்த நல்ல கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் படத்தை பாராட்டியும் கார்த்திக் சுபாராஜுக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம் படத்தைப் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

    இந்நிலையில் தற்போது பாரதிராஜா, கார்த்திக் சுபாராஜை அழைத்து ஜிகர்தண்டா படம் சிறப்பாக இருந்தது என்றும் எனக்கு மிகவும் பிடித்திருந்தாகவும் கூறி அவரை பாராட்டினார்

    Tuesday, 23 September 2014

    இரகசியம் என்ன..? மாஸ் படத்திலிருந்து பெயரை மாற்றுகிறாரா யுவன்?

    By: Unknown On: 20:43
  • Share The Gag
  • யுவன் சங்கர் ராஜா, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர். பல முன்னணி நடிகர், இயக்குனர்களின் பல படங்களுக்கு தனது இசையின் மூலம் வெற்றியைத் தேடித்தந்தவர். இவர் தற்போது நிறைய படங்களுக்கு இசையமைக்கமால் குறிப்பிட்ட சில படங்களை தேர்வு செய்து இசையமைத்து வருகிறார்.

    இவர் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். ரம்ஜான் அன்றுகூட மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார். இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும் தனது பெயரை மாற்றம் செய்யவில்லை. பலரும் இவரிடம் பெயர்மாற்றம் செய்யாததற்கான காரணம் என்று கேட்டு நச்சரித்து வந்தனர்.

    இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திற்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் மூலம் தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளாராம். மாற்றம் செய்த தனது பெயரை ‘மாஸ்’ படத்தின் டைட்டில் கார்டில் வெளியிடப் போகிறாராம் யுவன். 

    Monday, 22 September 2014

    இந்த படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட மகிழ்ச்சி - இயக்குனர்

    By: Unknown On: 21:09
  • Share The Gag
  • விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்த சிகரம் தொடு படத்தை கவுரவ் இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. விக்ரம் பிரபு நடித்த படங்களான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பியை ஒப்பிடும்போது சிகரம் தொடு மிக குறைவான ரிசல்ட்டையே கொடுத்துள்ளது என்பது பொதுவான கணிப்பு ஆனால் இயக்குனர் கவுரவ் சிகரம் தொடு படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிறார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூங்கா நகரத்துக்கு பிறகு எனது இரண்டாவது படமாக சிகரம் தொடுவிற்கு மக்கள் மற்றும் மீடியாக்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. கடந்த 12ந் தேதி 300 தியேட்டர்களில் சிகரம்தொடு திரையிடப்பட்டது. 90 சதவிகித தியேட்டர்களில் இரண்டாவது வாரமாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

    விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், தியேட்டர் கேண்டீன் மற்றும் பார்க்கிங் தொடர்புடையவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தின் வழியில் எனது அடுத்த படத்தை விரைவில் தொடங்க இருக்கிறேன். இவ்வாறு கவுரவ் கூறியுள்ளார். 

    விக்ரமுக்கு தேசிய விருது உறுதி.. எழுதிவைச்சிக்கிங்க... டைரக்டர் ஷங்கர்

    By: Unknown On: 19:56
  • Share The Gag
  • விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஐ’. ஷங்கர் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. ஹாலிவுட் தரத்தில் மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். இதன் பாடல்களை ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை அழைத்து வந்து சமீபத்தில் வெளியிட்டனர்.

    விக்ரம் இப்படத்தில் ‘பாடி பில்டர்’ ஆக வருகிறார். பாதி மனிதன் பாதி மிருகம் கலந்த இன்னொரு கேரக்டரிலும் நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக உடம்பை வருத்தி நடித்துள்ளார். இதற்காக அவருக்கு விருது கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் கூறும்போது, பாதி மிருகம், பாதி மனிதன் கலந்த கேரக்டரில் மேக்கப் போடுவதற்காக விக்ரம் உடம்பை குறைக்க வேண்டி இருந்தது. இதற்காக சாப்பிடாமல் இருந்து உடம்பை குறைத்தார். ரொம்ப கஷ்டப்பட்டார். அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என்றார்.

    விதார்த்துக்கு திருப்புமுனையை கொடுக்க வரும் காடு

    By: Unknown On: 18:57
  • Share The Gag
  • விதார்த் நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் ‘ஆள்’. இப்படத்தில் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த விதார்த், மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    ‘காடு’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்டாலின் ராமலிங்கம் என்பவர் இயக்குகிறார். விதார்த்துக்கு ஜோடியாக கேரளத்து வரவான சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகில் உள்ள மலைக்கிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். அந்த மலைக் கிராமத்தில் இருந்த வீடுகளுடன் சில வீடுகளை செட் போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

    இந்த படம் பற்றி விதார்த் கூறும்போது, இந்த படம் என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருக்கும். என்னுடைய எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்த ரசிகர்கள் இந்த படத்துக்கும் ஆதரவு தரவேண்டும் என்று கூறினார். இப்படத்தை சக்ரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நந்து தயாரித்திருக்கிறார். கே இசையமைக்கிறார். 

    முத்த ஆராய்ச்சி சீக்ரெட்ஸ்(kiss for you)

    By: Unknown On: 18:29
  • Share The Gag
  • முத்தம் என்று சொல்லும்போதே நமது உடல் ஏதோ ஒருவித கிளுகிளுப்புக்குள் சிக்கி விடுகிறது.
    உண்மையில் அந்த முத்தத்தை பெற்றால் எப்படி இருக்கும்?

    நினைக்கும்போதே, எங்கோ பறப்பதுபோல் இருக்கிறது என்கிறீர்களா?
    அது ஒருபுறம் இருக்கட்டும்: இப்படியே முத்தம் கொடுப்பதால் என்ன பயன் என்று சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது, இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுக்கும் தம்பதியர் உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு குறைவதை கண்டுபிடித்தார்கள்.

    அதாவது, இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுப்பவர்கள் டென்ஷன் ஆக மாட்டார்கள் என்பது இவர்களது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது.
    மேலும், திருமணம் ஆனவர்களுக்கும், ஆகாதவர்களுக்கும் இடையே டென்ஷன் எந்த அளவில் ஏற்படுகிறது என்ற கோணத்திலும் ஆராய்ச்சியை இவர்கள் தொடர்ந்தார்கள். அப்போது, புதிதாக திருமணம் ஆனவர்கள் டென்ஷன் இல்லாமல் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பது தெரிய வந்தது.
    திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்த பிறகு, பெரும்பாலான கணவன்-மனைவியர் தங்களுக்குள் முத்தம் கொடுத்துக்கொள்வதையும், தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதையும் குறைத்து விடுவதாகவும், அதனால் அவர்கள் மீண்டும் மன அழுத்தத்தை சந்திப்பதாகவும் அவர்களது ஆய்வு முடிவு கூறுகிறது.

    அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் முத்தம் தொடர்பான ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்களது ஆய்வில், முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பது கிடையாது என்பது தெரிய வந்தது.
    சில கணவன்மார்கள் மனைவிக்கு முத்தமே கொடுக்காமல் தாம்பத்திய உறவை முடித்துக் கொள்வதும், ஆனால், அவர்களது மனைவியர் அந்த முத்தத்தை விரும்புவதும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
    66 சதவீதம்பேர் முத்தமிடும்போது முகத்தை மூடிக்கொள்கிறார்களாம். மீதமுள்ளவர்கள்தான் கண்களை திறந்தபடி அல்லது தனது துணையை பார்த்தபடி முத்தமிடுகிறார்களாம்.

    அமெரிக்க பெண்கள் முத்த விஷயத்தில் பயங்கர கில்லாடிகளாக இருக்கிறார்கள். அவர்கள், திருமணத்திற்கு முன்பு குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிட்டு விடுகிறார்களாம்.
    இந்தியாவை பொறுத்தவரை காதல் திருமணம் செய்து கொண்டவர்களை காட்டிலும், பெற்றோரே பார்த்து முடித்ததில் இணைந்த ஜோடிகளே அதிகம் முத்தமிடுகிறார்களாம்.

    வேலைக்கு செல்லும்போது மனைவியை முத்தமிட்டுவிட்டு செல்லும் கணவன்மார்கள், அவ்வாறு முத்தமிடாதவர்களைக் காட்டிலும் 5 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்களாம்.
    முத்த ஆராய்ச்சி இதோடு நின்றுவிடவில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
    அந்த முத்த ஆராய்ச்சியில் கிடைத்த மேலும் சில தகவல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு :
    * ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தில் உள்ள 29 தசைகள் இயங்குகிறன.
    * எந்த அளவுக்கு அதிகமாக முத்தம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு முதுமையில் முகத்தில் சுருக்கம் வரும் நாட்கள் வெகுதூரத்திற்கு செல்கின்றன.
    * முத்தமிட்டுக் கொள்ளும்போது உருவாகும் எச்சிலில் கொழுப்பு, புரதம் மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
    * ஒரு முறை முத்தமிடுவதால் 2-3 கலோரி சக்தி நம் உடலில் எரிக்கப்படுகிறது. அதுவே, பிரெஞ்சு முத்தமாக இருந்தால், அதாவது உதட்டோடு உதடு வைத்து, நாவால் துலாவி இறுக முத்தமிட்டால் 5 கலோரி வரை சக்தி எரிக்கப்படுகிறதாம்.
    * ஆர்ட்டிக் பனி பிரதேசங்களில் வசிக்கும் எக்ஸிமோக்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டுக் கொள்கிறார்களாம்.
    * குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிட்டால், தனது உடலின் 26 கலோரி சக்தியை குறைக்க முடியுமாம். இதன்மூலம் அவர்களது அதிகப்படியான தொப்பை குறையுமாம்.
    * முத்தமிடும்போது நாம் பெரும்பாலும் வலது புறமாகவே முத்தமிடுகிறோம். நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கம் கட்டுப்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.

    இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளால் ஜூலை 6&ம் தேதியை தேசிய முத்த தினமாக கொண்டாடுகிறது இங்கிலாந்து. அந்த தினமே பிற்காலத்தில் உலக முத்த தினமாக மாறியது.

    முத்தத்திற்கு என்று ஒரு பழமொழியும் உள்ளது. அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது என்பது தான் அந்த பழமொழி.

    இன்னொரு விஷயம்... முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவாது. அதனால் எய்ட்ஸ் பயம் வேண்டாம்.
    உலக சினிமாவில் முதல் முத்த காட்சி தி கிஸ் என்ற படத்தில் இடம்பெற்றது. இந்த சினிமா 1896ல் வெளியானது. ஜான் சி.ரைஸ் என்ற நடிகர் மே இர்வின் என்ற நடிகைக்கு முத்தம் கொடுத்து, முத்த புரட்சியை ஆரம்பித்து வைத்தார்.

    செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா??

    By: Unknown On: 17:28
  • Share The Gag
  • பல நூற்றான்டுகளுக்கு முன்பே இந்திய அளவில் காமசுகத்தை{பாலியல் இன்பத்தை} வெளிப்படுத்தும் வகையில் பல விசையங்கள் உண்டு அதில் ஒன்று தான் காமசூத்திரா.கோவில்,அரன்மனை,சில பொது இடங்கள் இவைகளில் எல்லாம் அந்த காலத்திலேயே காமசுகத்தை விவரிக்க கூடிய சிற்பங்கள் பல உண்டு.

    மேலை நாடுகளில் எல்லாம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை செக்ஸ் என்றால் அசிங்காமான விசையம் என்ற கலாச்சாரம் தான் இருந்து.அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட.பெண்கள் எல்லாம் இன்று போல் சகஜமாக உடல் வேளிப்படுத்தும் உடை அணிய முடியாது. காமத்தை வெளிப்படையாக கொண்டாடும் ஆற்றல் மனிதர்கள் அளவுக்கு எந்த மிருகத்துக்கும் இல்லை.இது இன்று மேலை நாடுகள் ஒற்றுக்கொள்ளும் விசையம். ஆணால் தமிழ்{பத்திரிகைகள், சினிமா}இவைகள் தான் காதலையும், காமத்தையும் வெளிப்படையாக கொன்டாடுவது மிருகத்தனம் போல் லாஜிக் இல்லாத டையலாக்குகள் பேசும். "நொடிபொழுதில் சூடாகி, சூடேற்றி, அணைந்தும் விட்டாய் தீக்குச்சி போல ஆனால் நீ சூடேற்றிய கனல், சூடார நேரம் ஆகும் என்பதை ஏன் அறியாமல் போனாய்! இது உன் குற்றமா? அவள் குற்றமா? இல்லை படைத்தவன் குற்றமா? அல்லது எல்லாம் மாயையா? " 64 வகை இன்பங்களை முழுமையாக அநுபவித்து, ஒரு நல்ல முழு குழந்தையைப் பெறுவதற்காக என எடுத்துக் கொள்ளலாமே?

    அவசர அவசரமாக முதல் இரவிலேயே பெண்களுக்கு காமம் புரிவதற்க்குல், அவர்களின் காமம் முழுமைப் பெருவதற்க்குள், காம குமிழை போட்டுடைத்து, முன்றே மாதங்களில் குழந்தை பேற்றை எட்டியவர்களின் லிஸ்ட் மிகப் பெரியது. அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடவில்லையானாலும், வெறுத்து வருத்தப்பட்டது உண்மை. யோக கலை என்பது ஒரு சர்வ ரோக நிவாரணி, அதை ஒழுங்காக கடை பிடிக்கும் பட்ஷத்தில். நாடிசுத்தி,மூச்சு பயிற்சி,பிரணயாமம் இத்துடன் யோகாவையும் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு எந்த பிர்ச்சினையும் வராது. இதில் பெண்ணை வலது புறத்தில் படுக்க வைத்து, சூரிய கலையில் மூச்சுக்காற்று ஓடும் போது கூடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும். இதை அப்படியே உல்ட்டாவாக செய்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் கூறுவார்கள். யோககலை என்பது 108 நாடிகளையும் கன்ட்ரோல் செய்து ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் ஒரு அதி அற்புதமான விஷயம். ஒரு சரியான குருவிடம் கற்றுக்கொண்டு செய்வது உசிதம்."அறியாமைதான் இங்கு பேரின்பம் பெண்ணே... காதல் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே" - வைரமுத்து (அந்நியன் படத்தில்) " சொல்லி தெரிவதில்லை மன்மத கலை" - பழமொழி - இது சரியா ? என்னை பொருத்தவரை இருவருக்குமே அறியாமை என்பது ஓ.கே . தேடல் துவங்கியதே என பாடிக் கொண்டே மற்றதை பாக்கலாம்.

    பெண்ணும்க்கு தெரியாவிட்டாலும் கூட ஓ.கே. ஆனால் நான் இன்னும் திருப்தியடையவில்லை என்றே சொல்ல பயப்படும் நம் பெண்களிடையே, ஆண் அறியாமையிலும், பெண்ணும் எல்லாம் அறிந்து சொல்லத் தயங்குவதாயும் இருந்தால் பொழப்பு கிழிஞ்சுடும். வாஷிங்டன் : செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும், பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அமெரிக்காவில் லேட்டஸ்ட் மவுசு இது! இந்தியாவில், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகக் கலை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பின்னரே, சமீப காலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இன்னும் பலருக்கு யோகா, இந்தியாவில் பிறந்தது என்றும், பதஞ்சலி முனிவர் தான் அதை உருவாக்கினார் என்பதும் கூட தெரியாது. அமெரிக்கா கண்டுபிடித்தது போலத்தான் சொல்வர். மேலும், யோகாவை, பல மதத்தினரும் உரிமை கொண்டாடி, அவர்கள் தனியாக பெயர் வைத்தும் யோகாவை பிரபலப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், யோகாவை வியாபாரமாக்கி கோடிகோடியாக அள்ளி வருகின்றன. அமெரிக்க மக்களுக்கு பிட்சா மோகமும், வார இறுதி ஜாலியும் கூட இப்போது குறைந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லா திருப்தியும் கிடைக்கவும், உடல் ஆரோக்கியத்துக் கும்

    யோகா முக்கியமான அபூர்வ கலை என்று உணர ஆரம்பித்துவிட்டனர். இதை பயிற்சி பெற ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர். யோகா பற்றி நிபுணர்கள் ஆராய்ச்சிகளையும் செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில்,"செக்ஸ் பலத்தை யோகா பயிற்சி தருகிறது; யோகா செய்தால் ஆண், பெண்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாடு நீங்கி விடும்' என்று கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில்,"செக்ஸ் மீதான ஆர்வத்தை

    பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்' என்று கூறியுள்ளனர். கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் "செக்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,"68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்' என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர்.

    அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்' என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கலவியின்பம் தான் ஒரு ஆணையும்,பெண்ணையும் இல்வாழ்க்கையில் இணைத்து வைக்கிறது. சம்சார படகிலேறி, சதிராடும் வாழ்க்கை நீரில், திண்டாடும் மானிடர்கள் அவ்வப்போது இளைப்பாறிக்கொள்ளும் இடமே சிற்றின்பக்கூடம்.ஆண்டவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம் தான் தாம்பத்யம். ஆணின் குறியும்,பெண்ணின் யோனியும் இணைந்தது தான் சிவலிங்க தத்துவம் அல்லது சிவ சக்தி தத்துவம். செக்ஸை யோக வடிவில் பயிலும்போது அங்கே சக்தி இழப்புக்கு இடமில்லை. இருப்பினும் காம சூத்திரத்தின் எல்லா நிலைகளையும் ஒருவன் ஏக காலத்தில் அனுபவித்திட முடியாது. அதற்கு தேக பலம் அவசியம். முழு ஆரோக்கியமான ஆணும்,பெண்ணுமே இதை நடைமுறை படுத்த இயலும் இடைவெளி விட்டு. தற்கால தாம்பத்ய உறவு அரை மணிக்கு மேல் நீடித்தால் அது பெரிய விஷயம். 64 கலைகளையும் கடந்து விட்டேன் இனி எனக்கு
    மோகமில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனென்றால் 'அழுக்கு தீர குளித்தவனும் கிடையாது - ஆசை தீர அனுபவித்தவனும் கிடையாது".

    செக்ஸ் உறவில் ஆண்களுக்கு தோன்றும் பிரச்சினைகள்!!

    By: Unknown On: 01:02
  • Share The Gag
  • பெரும்பாலான ஆண்களுக்கு இந்த கவலை இருக்கும். ‘எல்லாத்தையும்’ நாமதான் ஆரம்பிக்கனும் நம் மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.

    செக்ஸ் உறவின்போது பெரும்பா லான ஆண்களின் மனதில் தோ ன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பா ட்டுக்கு கம் முன்னு இருப்பாங்க என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.
    ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ‘லீட் பண்ண மாட்டார்கள் அவரே ஆரம்பிக்கட்டும் முன்னேறட்டும் என்று காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது…

    பெரும்பாலான ஆண்கள் என்றில்லை கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்கு மே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம்இ பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.

    சில சமயங்களில்இ நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையாஇ இப்படி அமைதியாக இருக் கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமது ‘மூவ்’கள் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் கூட எழலாம்.
    முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பது கூட பலருக் குப் புரிபடுவதில்லை. இப்படிப்பட்ட சிந்தனைகளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம் தான்.

    ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.
    பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக் கம் காட்ட சில காரணங்கள் உள்ளன. நா மே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.

    நாமே முந்திக் கொண்டு போனால் நம் மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவா ரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான ‘சிக்னல்’ கொடுத்தாச்சேஇ புரிந்து கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.
    நான் சரியான முறையில்தான்இ உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட் கார்ந்திருக்கிறார்கள்.

    பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.
    ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி எக் ஸ்பர்ட் அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இருக்கிறது.

    எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன்று. யார் ஆரம்பித்தால் என்னஇ முடியும்போது அது சிறப்பாகஇ சந்தோ ஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

    அந்த நான்கு சுவருக்குள் தனிமையில் இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோஇ வெட்கமோஇ கெளரவம் பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற் றையும் தூரப் போட்டு விட வேண்டும். அப்போ துதான் உறவு இனிக்கும்இ சிறக்கும்.

    மேலும் பார்ட்னரிடமிருந்து வரும் ‘சிக்னலை சரி யாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையுமாகும். சிக்னல் வந்து விட்டால்இ அடுத்த வர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு  இல்லை இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் பிடி வாதமாக இருக்கக் கூடாது.

    ஒரு வேளை கணவர் பிசியாக இருந்து கொண்டிருப்பார். அப்போது பார் த்து மனைவி அருகே வந்து கன்னத் தில் முத்தமிடலாம்இ கொஞ்சலாம். அதல்லாம்தான் உறவுக்கு அழைப்ப தற்கான ‘சிக்னல்’கள். எனவே பிசியா க இருந்தாலும் கூட அந்த சமிக்ஞை களை சரியாக புரிந்து கொண்டு செய ல்பட்டால் பிரச்சினை இல்லை.

    மனைவி ஆரம்பிக்கட்டும் அவரே எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக அவரிடம் வெளிப் படையாக சொல்லி விடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் தயாராக இருப்பார்.
    மொத்தத்தில் அன்பைக் காட்டவும் அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும் செயல்பாடுகளும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால்இ ‘ஸ்டார்ட்டிங் டிரபுள்’ இருக்கவே இருக்காது.

    ஆண்மையை பாதுகாக்கும் மிளகு..!!

    By: Unknown On: 00:53
  • Share The Gag
  • நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.

    ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.

    கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

    தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

    இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.

    நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

    உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

    பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும்.

     தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.
    சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

    Sunday, 21 September 2014

    உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ ஆண்கள் செய்யும் சில தவறுகள்.

    By: Unknown On: 19:03
  • Share The Gag
  • ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க,சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க.

    பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. துரதிஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது.இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும்முக்கியமாக உடலுறவுதான் தான் வில்லனகவோ,வில்லியாகவோ மாறிவிடுகிறது. பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள்.

    உடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல்
    பெண்கள் உடலுறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே விரும்புகிறார்கள். ஆனால் தங்களுடைய செயற்பாட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள்.

    ஆற்றல்கள்

    சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதில் உள்ளவாறு செய்ய வெளிக்கிட்டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.

    பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.

    ஆத்திரம்

    பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.

    இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளியே வைத்து கதைப்பது தான் உகந்தது.

    தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல்

    இது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்து துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகிவிடுகிறது.

    அனேகமான பெண்களிற்கு உடலுறவிற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பாலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிய வாழ்கையில் நடக்க சாத்தியம் முற்றாக இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.

    செக்ஸ் உணர்வுகளை அடக்கினால்…(வயதுவந்தோர் மட்டும்) !!

    By: Unknown On: 18:08
  • Share The Gag
  • மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

    செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

    காம உணர்வுகள்

    மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

    அதீத காமம்

     அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

     பாலியல் குற்றங்கள்

     டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

     இதயநோய் வரலாம்

    காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

    முருங்கைக்காய்

     முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம்.

     முட்டைக்கோஸ்

     அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

    உடற்பயிற்சி

    செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம்.

    மனதை மாற்றும் நூல்கள்

     ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம்.

     மது, போதை

     காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம்.

     நண்பர்களிடம் கூறலாம்

     அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்….!

    Friday, 19 September 2014

    இந்திய பட வரலாற்றிலேயே ஐ - க்குப் பிறகுதான் எல்லா படமும்..!

    By: Unknown On: 21:39
  • Share The Gag
  • ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் ரிலீஸ் ஆன பிறகு என்ன சாதனையை நிகழ்த்துமோ தெரியாது...ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே, அதாவது தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே, இந்திய சினிமாவில் சாதனையை நிகழ்த்திய படமாகி இருக்கிறது. என்ன சாதனை? பட்ஜெட்டிலும், பிசினஸிலும், வசூலிலும், தமிழ் சினிமாவை விட ஹிந்திப் படங்கள் பல மடங்கு அதிகம்.

    அது மட்டுமல்ல, பாலிவுட் படங்கள் உலகம் முழுக்க வெளியாகின்றன. அப்பேற்பட்ட பாலிவுட் படங்களின் பட்ஜெட்டையே தென்னிந்திய திரைப்படங்களின் பட்ஜெட் பின்னுக்குத் தள்ளிவிட்டன. குறிப்பாக தமிழ்ப்படங்களின் பட்ஜெட் பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை தாண்டிவிட்டன. இதுவரை இந்தியாவில் தயாரான படங்களிலேயே அதிக தொகையில் உருவான படம் என்ற பெருமை ஐ படத்துக்குக் கிடைத்துள்ளது. அதாவது ஐ திரைப்படத்தின் பட்ஜெட் 185 கோடி ரூபாய்.

    ஐ படத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பாகுபாலி தெலுங்குப்படத்தின் பட்ஜெட். இதன் பட்ஜெட் 175 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் உள்ளது கோச்சடையான் படம். இப்படத்தின் பட்ஜெட் - 150 கோடி. இப்படங்களுக்கு அடுத்த இடங்களை பிடித்திருப்பது..மூன்று ஹிந்திப்படங்கள். ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பட்ஜெட் 130 கோடி. மற்றவை தூம் 3 மற்றும் கிரிஷ் -3. தூம் 3 படத்தின் பட்ஜெட் -125 கோடி. க்ரிஷ் 3 படத்தின் பட்ஜெட் -115 கோடி. 

    அழைப்புக்களை புறக்கணிக்கும் பேங் பேங் படக்குழு

    By: Unknown On: 21:02
  • Share The Gag
  • புதிதாக எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை புரமோட் செய்யும் நிகழ்ச்சிகள் டிவிக்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாணியை ஏற்க பேங் பேங் படக்குழு நிராகரித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் -8 நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன் நடித்த பேங் பேங் படத்தை புரமோட் செய்வதற்காக கலந்து கொள்ளுமாறு பேங் பேங் படத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

     ஆனால் இந்த அழைப்பை புறக்கணிக்க ஹிருத்திக் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பேங் பேங் படக்குழு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் என பிக் பாஸ் குழு கூறியிருப்பதை பேங் பேங் படக்குழு மறுத்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்ற. மேலும் எந்த ரியாலிட்டி ஷோ மூலமும் தங்கள் படத்தை புரமோட் செய்ய விரும்பவில்லை எனவும் திட்டவட்டமாகவும் தெரிவித்து பேங்பேங் படக்குழு.

    சித்தார்த் ஆனந்த் இயக்கி, ஹிருத்திக்-கத்ரினா கைப் நடித்துள்ள பேங் பேங் படம் அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தூம் 3 படத்தை எந்த ரியாலிட்டி ஷோ மூலமும் பிரமோட் செய்யாமல் அமீர்கான் வெளியிட்டதை பின்பற்ற நினைத்தே ஹிருத்திக் இந்த அழைப்பை புறக்கணித்துள்ளதாகவும் ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மீது தங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருப்பதால் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் படத்தை பிரமோட் செய்ய விரும்பவில்லை எனவும் பேங் பேங் கூறி உள்ளதாம்.

    Thursday, 18 September 2014

    ஐ விழாவில் கலந்து கொள்ள 15 கோடி பணம் பெற்றும் ஏன் இப்படி செய்தார் அர்னால்ட். ..?

    By: Unknown On: 23:02
  • Share The Gag
  • சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஐ இசைவெளியீட்டுவிழாவில் இசையை வெளியிடாமலே பாதியோடு கிளம்பிப்போனார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். அவரது வெளிநடப்பால் ஐ விழாவுக்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, திரைப்படத்துறையை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அர்னால்ட் புகழ்பெற்ற நடிகர். கலிபோர்னியா மாநில கவர்னராக இருந்தவர்.

     தவிர ஐ விழாவில் கலந்து கொள்ள 15 கோடி பணம் பெற்றிருக்கிறார். பிறகு ஏன் ஐ இசை வெளியீட்டு விழாவிலிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றார்? என்ற கேள்விக்கு பல்வேறு தகவல்கள் பதில்களாக சொல்லப்படுகிறது. ஐ விழாவுக்கு அர்னால்ட் கொடுத்தது 2 மணி நேரம் மட்டுமே..! விழா ஏற்பாட்டாளர்களின் சொதப்பல் காரணமாக பல மணி நேரம் அநியாயத்துக்கு காக்க வைக்கப்பட்டாராம் அர்னால்ட். தவிர விழாவின் இடையிடையே டெக்னிக்கல் பிராப்ளம் என்று ஏகப்பட்ட நேரத்தை சாப்பிட்டார்கள்.

    இதன் காரணமாகவே ஐ படத்தின் இசையை வெளியிடாமல் பாதியோடு கிளம்பிப்போனார் அர்னால்ட் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். தயாரிப்பாளர்கள் தரப்பிலோ வேறு காரணம் சொல்கிறார்கள், ஐ விழாவில் கலந்து கொண்ட பாடி பில்டர்களுடன் அர்னால்ட் கைகுலுக்கியபோது, சில பாடி பில்டர்கள் ஆர்வக்கோளாறில் அர்னால்டின் கையை முத்தமிட்டார்கள் என்றும், சில பாடி பில்டர்கள் அர்னால்டை கட்டிப்பிடிக்க முற்பட்டதால் அவரது உடை அழுக்காக்கப்பட்டது என்றும், அதனாலேயே கோபம் அடைந்து அர்னால்ட் கிளம்பிச்சென்றார் என்றும் சொல்கிறார்கள்.

    அதாவது அர்னால்டின் வெளிநடப்புக்கு பாடி பில்டர்கள்தான் காரணமாம். தங்கள் மீது பழியைப்போடுவதை அறிந்த பாடி பில்டர்கள் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி மீது கடும் மன வருத்தத்தில் உள்ளனர். இந்தப்பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க...விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் பாபி சிம்ஹா, அர்னால்டிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் அதனால் அர்னால்ட் கிளம்பிச் சென்றார் என்றும் சொல்கிறார்கள். இது குறித்து அர்னால்ட் ட்வீட் செய்தால்தான் உண்மை தெரிய வரும் போலிருக்கிறது? 

    இது புது மணத் தம்பதிகளுக்கு மட்டும் !!

    By: Unknown On: 22:06
  • Share The Gag
  • எதையுமே எதிர்பார்க்காதவர்கள், வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களை சந்திப்பதில்லை என்பது சான்றோர் வாக்கு. இந்தத் தத்துவம், நம்  எல்லோருக்கும், எல்லாக் காலகட்டங்களிலும், எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண உறவில் அடியெடுத்து வைப்போருக்கு!

    திருமண பந்தத்தினுள் நுழையும்போது, நாம் ஒரு புதிய மனிதரைப் பார்க்கிறோம். அந்த நபர் நமக்குப் பொருத்தமானவர் என்றும், நமக்கு வேண்டிய  எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் என்றும் ஆழ்மனதில் நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு பதிந்து விடுகிறது. ‘எனக்கு எதிர்பார்ப்புகளே இல்லை’ என  வெளியே சொல்லிக் கொண்டாலும், எல்லா மனிதர்களுக்குள்ளும் நிச்சயம் அது இருக்கும்.

    நம்மைச் சார்ந்தவர்கள் எல்லோரும், அது வாழ்க்கைத்துணையோ, குழந்தைகளோ, நண்பர்களோ யாராகினும், அவர்கள் நம்மைப் புரிந்து நடந்துகொள்ள  வேண்டும், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என சிலபல எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஏதேனும் பிரச்னை வந்தால்,  தவறு நம் மீதே இருந்தாலும், நம்மைச் சார்ந்தவர்கள் நமக்குத்தான் சப்போர்ட் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் அன்றாட  வாழ்க்கையில் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எதிர்பார்ப்புகளே இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லைதான். ஆனால், அது அளவோடு இருந்தால் பரவாயில்லை. எல்லா விஷயங்களிலும்  எதிர்பார்ப்புகள் கூடும்போது, நம்மையும் அறியாமல் எதிராளியை நாம் கட்டுப்படுத்துகிறோம் என்பதை உணர்வதில்லை. எதிர்பார்ப்புகள் கூடக்கூட,  ஒவ்வொரு செயலிலும் அனுபவிக்க வேண்டிய வியப்பை நாம் தவற விடுகிறோம். எதிர்பார்க்காமல் நடக்கும் விஷயத்தில் கிடைக்கிற சந்தோஷமும்  சுவாரஸ்யமும் ஈடு இணையற்றது. நினைத்தது நினைத்த மாதிரியே நடந்தது என்கிற திருப்தியைத் தவிர, எதிர்பார்ப்பு வேறெதையும் நமக்குக்  கொடுப்பதில்லை.

    திருமண வாழ்க்கையில் இத்தகைய எதிர்பார்ப்புகள்தான் உறவுகள் சிதையவும், திருமணத்தைத் தோல்வியடையச் செய்யவும் காரணமாகின்றன.  விவாகரத்து வேண்டி வழக்கறிஞர் களை அணுகும் பலரிடமும் பிரிவுக்கான காரணத்தைக் கேட்டுப் பாருங்கள்… ‘அவ (அல்லது) அவர் நான்  சொல்றபடி கேட்கறதே இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகு கணவனோ, மனைவியோ தனக்குக் கட்டுப்பட்டு, தன்  விருப்பப்படி வாழ வேண்டும் என நினைப்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்புதான். அதன் பின்னணியில் மறைந்திருப்பது கட்டுப்பாடன்றி வேறில்லை. எதிர்பார்க்கிற உங்கள் குணத்தால், துணையின் திறமைகள் அனைத்துக்கும் கதவடைக்கப்படுகிறது.

    எதிர்பார்ப்புகள் குறைவதால், அங்கே அன்பும் காதலும் அதிகமாகிறது. உறவுகள் உயிர்ப்புடன் இருக்கின்றன.  உதாரணத்துக்கு உங்கள் குழந்தையையே  எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தைச் செய்யாதே என நீங்கள் சொன்னால், அது வேண்டுமென்றே அதைத்தான் செய்யும். நாம் என்ன செய்ய  வேண்டும் என்பதை இன்னொருவர் நமக்கு சுட்டிக் காட்டுவது குழந்தை உள்பட யாருக்குமே பிடிப்பதில்லை.

    எதிர்பார்ப்பதும் அதை எதிர்ப்பதும்தான் மனித இயல்பு. உலகம் புரியாத குழந்தைகளுக்கே இப்படி என்றால், உங்களில் சரிபாதியான துணை மட்டும்  விதிவிலக்கா என்ன?

    எதிர்பார்ப்புகளில் மறைந்திருக்கிற அடுத்த ஆபத்து, குறை கண்டுபிடிப்பதும், திட்டுவதும், விமர்சனம் செய்வதும். ‘இத்தனை வருஷமா என்கூட குப்பை  கொட்டறே… எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுன்னு தெரியாதா?’ என்கிற திட்டில் நிறைந்திருப்பது முழுக்க முழுக்க எதிர்பார்ப்பு மட்டுமே. சரி…

    எதிர்பார்ப்பில்லாத உறவுக்கு எப்படிப் பழகுவது?

    உங்கள் துணையின் செயல்கள் உங்களுக்குக் கோபத்தையோ, ஏமாற்றத்தையோ உண்டாக்கும் ஒவ்வொரு முறையும், உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்துவதையோ, திட்டுவதையோ, கடுமையாக விமர்சனம் செய்வதையோ தவிருங்கள். உங்களுடைய ரியாக்ஷன், எதிர்பார்ப்பின் விளைவாக  உண்டானதா என ஒரு நிமிடம் யோசியுங்கள். ‘காலையில எனக்கு வேணும்னு தெரியாது… சட்டையை ஏன் அயர்ன் பண்ணி வைக்கலே?’ என்று  கத்துவது சுலபம்.

    மனைவி என்பவள், கணவனின் தேவையறிந்து பணிவிடை கள் செய்யக் கடமைப்பட்டவள்தானே என்று காலங்காலமாக ஆண்கள் மனதில் பதிந்து  போன எதிர்பார்ப்பின் வெளிப்பாடுதானே இது? எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத போது, நம்மையும் அறியாமல் எதிராளியிடம் கடுமையாக நடந்து  கொள்கிறோம். எதிராளி அமைதியானவர் என்றால் அடங்கிப் போவார். அப்படியில்லாத பட்சத்தில், தன் பங்குக்கு திருப்பி வார்த்தைகளைக் கக்குவார்.  இருவருக்குமான வாக்குவாதம் முற்றும். அன்யோன்யம் கெடும்.

    எதிர்பார்ப்புகளைக் கையாள் வது என்பது கணவன் – மனைவி இருவருக்குமே அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு கலை. அது வாழ்க்கையில்  மிகப்பெரிய சவாலும்கூட. வாழ்நாள் முழுவதும் அந்தச் சவாலை எதிர்கொள்ளப் பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எதிர்பார்ப்புகளை  அழைப்புகளாக மாற்றுவது இந்தப் பிரச்னைக்கான அருமையான தீர்வு. எதிர்பார்க்கும் போது, எதிராளி அதைச் செய்தே ஆக வேண்டும் என்கிற  மறைமுகக் கட்டுப்பாட்டையும் வைக்கிறோம். ஆனால், அழைப்பில் அப்படியில்லை.

    செய்வதும் செய்யாமல் தவிர்ப்பதும் துணையின் தனிப்பட்ட விருப்பம். அழைப்பில் ஒரு விஷயத்தைச் செய்தாக வேண்டிய அழுத்தமோ, மிரட்டலோ,  பயமுறுத்தலோ இருப்பதில்லை. ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து இதைச் செய்யலாமா?’ என்றோ, ‘நாம ஏன் இப்படிச் செய்யக்கூடாது?’ என்றோ, உங்கள்  துணைக்கு அழைப்பு விடுக்கலாம். இந்த அணுகுமுறை நேர்மையானது. பாதுகாப்பானது. நம்மைப் போலவே நம் துணைக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும்.  துணையாகிய நீங்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் அவருக்கும் இருக்கும் என யோசித்தாலே நம் தவறு நமக்குப்  புரிந்து விடும். முதல் கட்டமாக நம்மை மாற்றிக் கொள்ளவும் முனைவோம்.

    எதிர்பார்ப்புகள் அழைப்புகளாக மாறும் போது, உங்களுக்கு நிறைய சம்மதங்கள் கிடைக்கும். அதன் விளைவாக சந்தோஷங்கள் பெருகும். ‘லவ்  பண்றப்ப, எப்படியெல்லாம் நடந்துக்கிட்டே… கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் மாறிப் போச்சு…’ என்கிற புலம்பல்கள் இருக்காது. காதலிக்கிற போது  நீங்கள் இருவரும் அனுபவித்த அதே நெருக்கமும் சுவாரஸ்யமும் காலத்துக்கும் தொடரும்… முயற்சி செய்து பாருங்களேன்!

    எதிர்பார்ப்பில்லாமல் வாழ ஒரு பயிற்சி!

    வீடு முழுக்க ஒரே குப்பை… தேவையற்ற பொருள்களால் நிரம்பி வழிகிற வீட்டை சுத்தப்படுத்த முடிவெடுக்கிறீர்கள். சுத்தப்படுத்த ஆரம்பித்ததும், ‘இது  வேண்டாம்… அது பயன்படாது…’ என ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி வீட்டுக்கு வெளியே வைக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் வீடே காலியாகிறது.  இரண்டே நாள்கள்தான்… மறுபடி மனம் என்கிற வேதாளம், மரத்தின் மீது ஏறிக் கொள்கிறது. ‘ச்சே… அந்த நாற்காலியில உட்கார்ந்து டி.வி  பார்த்தாதான் பார்த்த மாதிரி இருக்கு.

    ஒரு கால் லேசா உடைஞ்சிருந்தா என்ன, சரி பண்ணிக்கலாம்’ என உடைந்து, ஓரத்தில் ஒதுக்கிய நாற்காலியை மறுபடி வீட்டுக்குள் கொண்டு  வருகிறீர்கள். ஒன்று இல்லாமல் வாழ முடியாது என்கிற உங்கள் நினைப் பில் ஒவ்வொன்றாக உள்ளே வருகிறது. மறுபடி உங்கள் வீடு, அதே பழைய  தோற்றத்துக்கு மாறுகிறது. புதிய சிந்தனைகளும்கூட இப்படித்தான். புதிய சிந்தனைகளுக்கு அத்தனை சீக்கிரத்தில் இடம் கொடுக்காது உங்கள் மனது. இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம்.

    சுயநம்பிக்கை, சுயமுன்னேற்றப் புத்தகங்களை வாசிக்கிறோம் அல்லது அது தொடர்பான சொற்பொழிவைக் கேட்கிறோம். படிக்கவும் கேட்கவும்  பிரமாதமாகத்தான் இருக்கிறது. ‘இன்று முதல் நான் இவங்க சொல்றபடி தான் வாழப் போறேன்’ என வைராக்கியம் கொள்கிறோம். நம்மையும்  அறியாமல் நமக்குள் யானை பலம் வந்துவிட்டதாக உணர்கிறோம். எல்லாம் ஒருநாளோ… இரண்டு நாளோதான்… மறுபடி பழைய பலவீனங்களுடனும்  குழப்பங்களுடனும் மனது தடுமாறுகிறது.

    யாராவது விசாரித்தால், ‘அவங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு. எனக்குத்தான் பயன்படலை’ என சப்பைக்கட்டு கட்டுகிறோம். ஏன்?பிறந்தது முதல்  லட்சக்கணக்கான நெகட்டிவ் எண்ணங்களால் வளர்க்கப்படுகிறோம் நாம் ஒவ்வொருவரும். ‘இது முடியாது, அது தவறு, சாத்தியமே இல்லை’ என்கிற  மாதிரியான நெகட்டிவ் சிந்தனைகள். ஏற்கனவே பல வருடங்களாக மனதுக்குள் டியூன் செய்யப்பட்ட அந்த நெகட்டிவ் எண்ண அலைவரிசையின்  ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு, புதிய சிந்தனைகளுக்குப் பழகுவது என்பது சற்றே சிக்கலானதுதான்.

    என்னதான் செய்வது? மாற்றம் தேவைப்படுகிற சிந்தனைகளை தினசரி மந்திரம் போல உச்சரிக்க வேண்டும். ‘நான் அன்பானவன்/ள்…  நான் என்  துணையை அளவுகடந்து நேசிக்கிறேன்… காலத்துக்கும் காதலுடன் வாழ விரும்புகிறேன்…’ என நீங்கள் விரும்பும் மாற்றத்தை வாய்விட்டுப் பல  முறை சொல்லிக்கொண்டே இருங்கள். குளிக்கிற போது, தனிமையில் இருக்கும்போது… இப்படி எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை  வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த ‘பழையன கழிதல்’ டெக்னிக், நிச்சயம் உங்கள் சிந்தனைகளை மட்டுமின்றி, உங்களுக்கும்  துணைக்குமான அன்யோன்யத்தை, அணுகுமுறையை பாசிட்டிவாக மாற்றும்.

    Friday, 12 September 2014

    பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் !

    By: Unknown On: 20:16
  • Share The Gag
  •  என்னங்க இது? தூக்கம் வரலீங்கறதே ஒரு பிரச்னை; அதோடு பல பிரச்னைகளையும் நெனச்சுப் பார்த்து, தூங்கப்போனா தூக்கம் வருங்களா?’ இது பலரது கேள்வி. நியாயமானதுதான்.
    எந்தவிதமான பிரச்னைகளுடன் தூங்கச்செல்வது என்பது மிக முக்கியம். நமது உடல் பலம், மனோசக்தி இரண்டுமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் கொடுத்துவிடும். இதற்கும் மேலாக, தீர்வுகளே தெரியாத பிரச்னைகள் எல்லோருக்குமே உண்டு. ஒரு சிலவற்றைமற்றவர்களிடம் கூறி, ஆலோசனை பெறலாம். சிலவற்றையாரிடமும் கூறமுடியாது.

    பிரச்னைகள்
    பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. பிரச்னைகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டால், தைரியம் குறைந்து, பயம்வந்து வாழ்க்கை மோசமாகிவிடும். பிரச்னைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். ஒருவருக்குப் பிரச்னையாக இருப்பது வேறொருவருக்கு பிரச்னையாக இருக்காது.
    ஒருவர் தமது பேச்சாலும், செயல்பாட்டாலும் தமக்கு உருவாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் ஒருபக்கம். மற்றவர்களாலும், இயற்கையாலும் உண்டாகும் பிரச்னைகள் மறுபக்கம்.
    இவற்றுள் சிறிது எச்சரிக்கையாக விழிப்புநிலையில் இருந்தால், தாமே உண்டாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். அதையும் மீறி, பிரச்னைகள் வந்தால், முதலில் அவைகளை ஒப்புக்கொள்ளும் மனநிலை தேவை. அதன்பின் ஆராய்ந்து பார்த்து, என்ன பிரச்னை எனக் கண்டறிந்து, நீக்குவதற்குத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்பிரச்னை முடிவுக்கு வரும்.

    சேகர் தன் பெற்றோருடன் கோவையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் செல்கிறான். அவனுக்கு ரயிலில் சைடு லோயர் பெர்த் டிக்கெட் வாங்கியிருந்தனர். தான் நன்றாகத் தூங்க வேண்டுமென்று, மேல் (அப்பர்) பெர்த் பயணியிடம் கேட்டு, இடத்தை மாற்றிக்கொண்டான். இரவுப்பயணம் சுகமாய்க் கழிந்தது. பகல் பயணத்தில் மிகுந்த சிரமப்பட்டான்; தன் பெற்றோரின் உதவியை நாடினான். அவர்களும் அந்தப் பயணியிடம் பக்குவாய் பேசி, பகலில் அவர்கள் மகன் கீழ் பெர்த் இரவில் மேல் பெர்த் என்று பயணம் செய்ய உதவுமாறு ஏற்பாடு செய்தனர். யோசித்தால், இந்த பெர்த் மாற்றமே அவசியமில்லாதது என அறியலாம். இரண்டு நாட்கள் பயணம், கிடைத்த இடத்தை ஏற்றுக்கொள்வது தான் பிரச்னைகளைத் தராது.
    மற்றவர்களாலும், இயற்கையாலும் வரும் பிரச்னைகளுக்குத் தமது அனுபவம், அனுபவசாலிகள், பெரியோர்களது ஆலோசனை ஆகியவற்றின் உதவியால் தகுந்த தீர்வு பெறமுடியும். சில சமயங்களில் ஒரு பிரச்னைக்குப் பல தீர்வுகள் கிடைக்கும். எதை ஏற்றுக்கொள்வது என்று குழப்பமாயிருக்கும். இதுபோன்றபிரச்னைகளை ஆழ்மனதுக்கு அனுப்பிவிட்டால், சரியான தீர்வு கிடைக்கும்.

    நம்மால் தீர்க்கக்கூடியவை, நம்மால் தீர்க்க முடியாதவை என்றவகையில் பிரச்னைகளைப் பிரித்துவிட்டால், மிகச்சுலபமாக அவைகளைக் கையாள முடியும். உதாரணமாக ஊழல் என்பது பெரிய, முக்கிய பிரச்னைதான். தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது. நமது கைகளுக்கு அப்பாற்பட்டது என இதை இனம் கண்டு, ஆதரவு மட்டும் தெரிவிப்பதால், நமக்கு பாதிப்பு வராது.

    தூக்கம்
    ஒரு பயிற்சியின்போது, “எதற்காகத் தூங்குகிறோம்” எனக்கேட்டதற்கு, “தூக்கம் வருகிறது; அதனால் தூங்குகிறோம்” என்று பலர் கூறினர்.
    நம் உடல் செல்கள் சோர்வடைந்த தம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும், சக்தி ஓட்டப் பாதைகளில் (Meridians) உள்ள நரம்புகளைப் பழுது நீக்கவுமே தூக்கம் வருகிறது.
    எவ்வளவு நேரம் தூங்குகிறோம்? அதில் ஆழ்ந்த தூக்கம் எவ்வளவு நேரம், அதிகாலைத்தூக்கம், பகல் நேரத்தூக்கம் எனப் பலவகையாகப் பிரித்து அறிய வேண்டும். பகல் நேரத்தூக்கம், தூக்கமாக இல்லாமல், ஓய்வாக இருப்பது நல்லது. அதிகாலைத் தூக்கம் (4 முதல் 6 மணி) தவிர்க்கப்பட வேண்டும். இரவு 11 மணிமுதல் காலை 3 மணிவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
    தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே இரவு உணவை முடித்திருப்பதும், குறைந்தது 1 மணிநேரம் முன்பே தொலைக்காட்சியை அணைப்பதும் சிறந்தது. நல்ல புத்தகங்கள் படித்து, அந்த நினைவுகளுடன், அல்லது தீர்வு தேவைப்படும் முக்கியமான பிரச்னைகளின் நினைவுகளுடன் தூங்கச் செல்வது ஏற்புடையது.

    கனவுகள்
    “”நமது எண்ணங்கள்தான் கனவுகளாகத் தெரிகின்றன” – இது சிலர் கூற்று;
    “”நம் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவுகள்”
    - இது ஆராய்ச்சியாளர்களின் முடிவு;
    “”உறக்கத்தில் மனதில் அனுபவம். உருவம், சப்தம், உணர்ச்சி இவற்றின் தொடர்காட்சிகளே கனவுகள்” – இது ஆன்மீகவாதிகளின் அறிவிப்பு.

    பொதுவாக நமது எண்ணங்கள்தான் உறக்கத்திலே காட்சிகளாக வடிவம் பெற்று கனவுகள் என்று பெயர் பெறுகின்றன.
    ‘கனவு என்பது தூக்கத்தில் வருவதல்லÐ உன்னைத் தூங்கவிடாமல் செய்வது’ என்றார் இன்றைய இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் முன்னாள் பாரத குடியரசுத்தலைவர் திரு. அடஒ அப்துல்கலாம் அவர்கள்.
    ஒரு மனிதனின் சராசரியான வாழும் காலத்தில் 10ல் 1 பங்கு கனவுக்காலமாய் கழிகிறது.
    தினமும் சுமார் 2 மணிநேரம் கனவு காண்கிறோம்.

    ஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேர இடைவெளியில் 5 முதல் 15 நிமிட நேரம் நீடிக்கும். காட்சிகளைக் கனவாய் காண்கிறோம். அதிகாலைக் கனவுகள் 15 நிமிடங்களுக்கும் அதிக நேரம் நீடிக்கும்.
    ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அளவில் கனவுகள் வருகின்றன.
    நேர்மறையானதைவிட எதிர்மறையான காட்சிகளே அதிகம் வருகின்றன (பல பிரச்னைகளில் சிக்கித் தடுமாறுவது, உயிருக்கு பயந்து ஓடுவது போன்றவை).
    Rapid Eye Movement (REM) மிக வேகமான கண் அசைவு கனவை உருவாக்கும். நம் மூளையின் முன்பகுதியும் நடுப்பகுதியும் தூண்டப்படுவதே, கண் அசைவுக்குக் காரணம். பெரும்பாலும் தஉங தூக்கத்தில் தோன்றும் கனவுக்காட்சிகள் மறந்துவிடும். கனவின் மொத்த சதவீதத்தில் இவை 90 சதவிகிதத்திற்கும் கூடுதலாகும்.
    சர்ய் – Rapid Eye Movement (NREM) கண் அசையாமல் தூங்கும்நிலை. இந்நிலையில் காட்சிகளாய் காணும் கனவுகள். காலை எழும்போது நினைவில் நிற்கும்.

    ஆழ்மனம்
    நமது மனத்தை மூன்று நிலைகளாகப் பிரித்து வைத்துள்ளனர்.
    மேல் அல்லது புறமனm Conscious Mind
    நடுமனம் Sub-Conscious Mind
    ஆழ்மனம் Super Conscious Mind
    மேல் மனம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் செயல்படும்; அவற்றைப் பதிவு செய்யும்.
    நடுமனம் பழக்கத்தின் அடிப்படையில், விருப்பத்தின் அடிப்படையில் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும்.
    ஆழ்மனம் விருப்பு வெறுப்பின்றி, நியாய உணர்வுடன், தெய்வீக சிந்தனையுடன் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கான சரியான தீர்வைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும்.

    தீர்வுகள்
    ஒரு பூட்டு தயாரிக்கும்போதே, அதற்குப் பல சாவிகள் தயாரிப்பது போல, எந்தப் பிரச்னையும் வரும்போதே, பலவிதமான தீர்வுகளுடனேயே வருகின்றது. நபருக்கு நபர் பிரச்னையா, இல்லையா என்பதும், தீர்வுகளும் வேறுபடும்.
    ஒருவருக்குள்ள பிரச்னை தீர ஒருவிதமான செயல்பாடு தேவையென்றால், வேறொருவருக்கு இதே பிரச்னைக்கு இதே செயல் தீர்வாக அமையாமலும் போக வாய்ப்புண்டு.

    ஒருவருக்குத்தம் 60வது வயதில் கண்பார்வையில் கோளாறு, நண்பர்கள், உறவினர்கள் எனப்பலரும் அக்கறையுடன் பல ஆலோசனைகள் கூறுகின்றனர். எல்லாமே நல்லவைதான். ஆனால், எந்த ஆலோசனையைச் செயல்படுத்துவது என்பதில் இவருக்கு குழப்பம். காரணம் ஆலோசனை கூறிய அனைவருமே உண்மையிலேயே இவர் மீதுள்ள அன்பினால்தான் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் இவற்றுள் எந்த ஆலோசனைப்படி செயல்பட்டால், பிரச்னை சரியாகும் என்று எண்ணி உறங்கச் செல்ல வேண்டும். தொடர்ந்து எண்ணும்போது சரியானதீர்வு அவருக்கு ஏதோ ஒரு காட்சி மூலம் கனவாகத் தெரியும்.

    தையல்மிஷின் ஊசி

    கையால் தைக்கும் ஊசியில் நூல்கோர்க்கும் துவாரம், கூர்மையான பகுதிக்கு எதிர்ப்பகுதியில் இருக்கும். ஆனால் தையல்மிஷினில் உள்ள ஊசியில் கூர்மையான பகுதியிலேயே நூல்கோர்க்கும் துவாரம் இருக்கும். இதைக்கண்டு பிடித்தவர் பல நாட்களாக முயன்றும் தீர்வு கிடைக்காத நிலையில், இதே நினைவாக உறங்கும்போது, அவர் கண்ட கனவிலிருந்து, கூர்மையான பகுதியில் துவாரமிட்டு ஊசியை வடிவமைத்தார்.

    உறக்கத்தில் கண்ட கனவில் இவர் ஆதிவாசிகள் வாழும் காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டார். அவர்கள் இவரைத் தம் தலைவனிடம் அழைத்துச் செல்கின்றனர். தலைவனோ, இவரை கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு, வேகவைத்து, விருந்துண்ணுமாறு ஆணையிட்டான். மகிழ்ச்சியில் ஆதிவாசிகள் கையிலிருந்த ஈட்டி போன்றகூர்மையான ஆயுதத்தால் நிலத்தைத் தொட்டுதொட்டு, இவரைச் சுற்றி ஆடிவந்தனர்.

    கூர்மையான பகுதி கீழே மேலே சென்று வருவதைக் கண்ட இவருக்கு, அந்தப்பகுதியில் துளைபோட்டு நூலைக்கோர்க்கும் எண்ணம் வந்தது. தூக்கம் கலைந்தது. கனவு முடிந்தது. தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது.
    இதுபோல் பலவற்றைக் கூறலாம்.

    எனவே, எந்தப் பிரச்னையாலும் தீர்வுகள் இல்லாமல் வருவதேயில்லை எனத்திடமாக நம்ப வேண்டும்.
    அந்தத் தீர்வுகளைத் தேடித்தாகத்துடன் உறங்கச் செல்ல வேண்டும்.
    முழுமன ஈடுபாடு, கட்டாயம் தீர்வுகளுடன் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்பும்.

    முன் பாதி சவ சவ பின் பாதி பர பர - சிகரம் தொடு - திரைவிமர்சனம்!

    By: Unknown On: 19:48
  • Share The Gag
  • ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் . நகர்ல ஆங்காங்கே ஏ டி எம் செண்ட்டர்களில் கொள்ளை நடக்குது. நவீனமான கொள்ளை.அதாவது ஏ.டி.எம்., செண்ட்டர்ல நம்ம ஏ.டி.எம்., கார்டு பாஸ் வோர்டை திருடி, போலி கார்டு ரெடி பண்ணி ரத்தம் இன்றி, யுத்தம் இன்றி சாத்வீகமா சாமர்த்தியமான திருடல்.

    இந்தப் பிரமாதமான சப்ஜெக்டை எவ்வளவு த்ரில்லிங்கா பண்ணி இருக்கலாம்? ஒரு பரபரப்பான த்ரில்லர் கம் ஆக்ஷன் பேக்கேஜ் கதையை வெச்சுக்கிட்டு பின் பாதியில் பட்டையைக் கிளப்பும் திரைக்கதை வேகத்தை வெச்சுக்கிட்டு எதுக்குதான் இயக்குநர் அவ்வளவு தடுமாறினாரோ முன் பாதியில்?

    ஜில்லாவில் வருவது போல் அப்பாவுக்கு போலீஸ் பதவியில் மகனைப்பார்க்க ஆசை.ஆனா மகனுக்கு அது பிடிக்கலை. காதலிக்கும் போலீஸ் காதலன்னா பிடிக்காது.சம்பந்தமே இல்லாம ஹரித்வார் டூர்ல 4 ரீல் என முன் பாதியில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள்.

    ஹீரோவா விக்ரம் பிரபு. ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர்.நூல் இழையில் அந்த வெற்றியைத்தக்க வெச்சுக்கிட்டார். கொஞ்சம் ஏமாந்திருந்தா இது ஒரு தோல்விப்படம் ஆகி இருக்கும். ஆனாலும் செம ஹிட் படத்தை சாதா ஹிட் படமாக்கிட்டாங்கன்னு தான் சொல்லனும்.போலீஸ் ஆஃபீசர் கெட்டப்பில்
    எக்ஸ்ட்ரா கம்பீரம் காணோம்.மழு மழு அமுல் பேபி போல் இருக்கார்.

    ஹீரோயினா மோனல் கஜ்ஜர். ஆந்திரா ஸ்வீட் ஆப்பம். மொழு மொழு கன்னங்கள்.பஞ்சு மிட்டாய் குட்டி உதடு,துக்ளியூண்டு கண்கள் என முதலுக்கு
    மோசம் இல்லை (இவன் டிக்கெட்க்கு கொடுத்த 100 ரூபா தான் மொதலாம். அதுக்கு மோசம் இல்லையாம்,அடேய் ;-))பாடல் காட்சிகளில் இவர் கிளாமர் காட்டாதது அதிர்ச்சி அளிக்கிறது.நாம எதுக்கு தான் ஜெர்க் ஆகலை?

    ஹீரோவோட அப்பாவா சத்யராஜ். நல்ல கேரக்ட்ர் ரோல்.வில்லனின் காலை விடாமல் பிடிப்பது எல்லாம் ஊமை விழிகள்லயே பாத்துட்டோம் பாஸ்.
    ஆனாலும் கண்ணியமான நடிப்பு.

    ஈரோடு மகேஷ் இந்தப்படத்துல சப் இன்ஸ்பெக்டரா வர்றார்.யார்யா அங்கே நக்கலா சிரிக்கறது?

    வில்லன்களாக வரும் அந்த 3 பேரும் இன்னும் மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கலாம்.

    இசை அண்ணன் இமான்.கூச்சமே இல்லாம சுட்டிருக்கார். எதுக்காக கூச்சப்ப்படனும்? யாரும் செய்யாததையா அவர் செஞ்சுட்டார்?

    பின்னணி இசை சுமார் ரகம்.2 பாட்டு ஹிட் ஆகிடும்.

    ஆக்சன் காட்சிகள்,ஃபைட் காட்சிகள் நம்பகத்தன்மையோட இருக்கு. சினிமாத்தனம் இல்லை. க்ளைமாக்சில் நல்ல விறுவிறுப்பு.

    சிகரம் தொடு - முன் பாதி சவ சவ பின் பாதி பர பர.ஏ.டி.எம்., கொள்ளையர் கதை - ஏ பி சென்ட்டரில் சுமாரா ஓடிடும்

    கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் பற்றிய ருசிகர தகவல்

    By: Unknown On: 18:57
  • Share The Gag
  • ஜிகர்தண்டா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் என்ன என்பது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.

    ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ்க்கு பிறகு அவர் அளித்த சில பேட்டியில் "என்னுடைய அடுத்த படம் முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட ஒரு படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    தற்போது இயக்குனர் தரப்பிலிருந்து ஒரு புது செய்தி வந்துள்ளது, அதாவது அவர் இயக்க போகும் அடுத்த படத்தின் பெயர் இறைவி என்றும் இதை தவிர வேறு சில தலைப்புகளும் பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இப்படத்தை சி.வி குமார் தயாரிக்க உள்ளதாகவும் ஏறக்குறைய பாபி சிம்ஹா தான் ஹீரோவாக நடிப்பார் என தகவல் கசிந்து உள்ளது.

    காஷ்மீருக்காக பெருந்தன்மையுடன் நிதி அளிப்பீர்..!

    By: Unknown On: 18:38
  • Share The Gag
  • ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு மக்கள் பெருந்தன்மையுடன் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

    "எனது சக மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், ஜம்மு - காஷ்மீரில் எதிர்பாராத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நிறைய எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்துள்ளனர்.

    கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களும் உள்கட்டமைப்புகளும் அழிந்து போயுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு இத்தகைய நெருக்கடி நிலையில், அவர்கள் வாழ்க்கை மீண்டும் புனரமைக்கப்பட நமது உதவி பெரிதும் தேவைப்படுகிறது.

    எனவே, பாதிக்கப்பட்ட நமது சகோதரர், சகோதரிகளுக்கு இத்தகைய நெருக்கடி தருணத்தில் தோள் கொடுப்பது நமது கடமையாகும். ஆகவே, பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு நாட்டு மக்கள் அனைவரும் பெருந்தன்மையுடன் நிதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மோடி.

    இதற்கான தொகையை காசோலை, டிராஃப்ட் அல்லது ரொக்கம் ஆகிய முறைகளில் அனுப்பலாம். பிரதமர் அலுவலக இணையதளம் மூலமும் நிதியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இதற்காக டிராஃப்ட் எடுத்தால் எந்த விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை ஜம்மு - காஷ்மீர் நிவாரணத்திற்காக அளித்ததையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

    ‘பர்மா’ வேகமே இல்லை ... திரைவிமர்சனம்

    By: Unknown On: 17:02
  • Share The Gag
  • கடன் வாங்கி கார் வாங்கியவர்கள், வாங்கிய பணத்தை திரும்ப கட்டமுடியாமல் போகும் நிலையில், அவர்களுடைய காரை பறிமுதல் செய்து, கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்கும் பணியை (கார் சீசிங்) செய்து வருகிறார் கோத்ரா சேட்டு (அதுல் குல்கர்னி). இவரிடம் உதவியாளாக இருந்து வருகிறார் குணா (சம்பத்). குணாவிடம் பர்மா (மைக்கேல்) மற்றும் பூமர் (கார்த்திக் சபேஸ்) இருவரும் வேலை பார்க்கிறார்கள்.

    சேட்டு சொல்லும் வேலையை குணா, தனது உதவியாளர்களான பர்மா மற்றும் பூமரிடம் ஒப்படைக்கிறார். அவர்களும் குணா சொன்ன வேலையை செய்து முடிக்கிறார்கள். இதனால் குணாவுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. ஆனால், குணாவோ பர்மா மற்றும் பூமருக்கு குறைந்த ஊதியமே கொடுக்கிறார்.

    இதனால் கோபமடைந்த பர்மாவும், பூமரும் குணாவை பலிவாங்க அவனை போலீசில் மாட்டிவிடுகின்றனர். போலீசும் குணாவை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

    இதற்கிடையில், பர்மாவும் கல்பனா(ரேஷ்மி மேனன்)வும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் கல்பனாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவளை கண்டிக்கின்றனர். ஆனால், பர்மாவைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லி, வீட்டை விட்டு வெளியேறி பர்மாவுடனேயே தங்குகிறாள் கல்பனா.

    குணா ஜெயிலுக்கு சென்றுவிட்ட நிலையில், சேட்டுவிடம் நேரிடையாக பணியை வாங்கி செய்து வருகின்றனர் பர்மாவும், பூமரும். ஒருநாள் இவர்களுக்கு 28 காரை பறிமுதல் செய்யவேண்டும் என்ற பணி வருகிறது. இந்த பணியை பூமர், பர்மா, கல்பனா மூன்று பேரும் இணைந்து செய்கின்றனர்.

    27 கார்களை பறிமுதல் செய்துவிட்ட நிலையில், 28-வது காரை பறிமுதல் செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். அப்போது, கொள்ளைக் கும்பல் ஒன்று வங்கியில் பணத்தை திருடிக்கொண்டு வந்து, இவர்கள் பறிமுதல் செய்த காரில் ஏறி தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

    சேட்டுவிடம் சென்று மூவரும் இதுபற்றி முறையிடுகிறார்கள். சேட்டுவோ, நாயகி கல்பனாவை பிடித்து வைத்துக் கொண்டு, காரை திரும்பக் கொண்டு வந்தால்தான் அவளை உயிரோடு விடுவேன் என்று இருவரையும் மிரட்டுகிறான். இதையடுத்து, பர்மாவும், பூமரும் காரைத் தேடி அலைகின்றனர்.

    அப்போது, இவர்களுக்கு மாறன் (மது ரகுராம்) என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர், தன்னை போலீஸ் என்று இவர்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். மேலும், அந்த கார் எங்கிருக்கிறது என்பது தனக்கு தெரியும் என்றும், அந்த காரை பறிமுதல் செய்தால், அந்த காரில் இருக்கும் பணத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு காரை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறான்.

    இதற்கிடையில், பர்மா-பூமரால் பழிவாங்கப்பட்ட குணா சிறையில் இருந்து வெளியே வந்து இவர்களை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

    இறுதியில் பர்மாவும் பூமரும் திருடுபோன காரை மீட்டு கல்பனாவை மீட்டார்களா? குணா, பர்மாவையும் பூமரையும் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.

    பர்மா கதாபாத்திரத்தில் மைக்கேல் தங்கதுரை அந்த கதாபாத்திரத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. தானும் மாஸ் ஹீரோவாக வேண்டும் என்று நினைத்து களமிறங்கியுள்ள இவருக்கு, அதற்கேற்ற நடிப்பும், பொருத்தமான முகமும் இல்லாதது வருத்தமே. காதல் காட்சிகளில் மட்டும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.

    ரேஷ்மி மேனன் திரையில் அழகாக தெரிகிறார். இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும், அவருடைய கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். மைக்கேல் நண்பராக வரும் கார்த்திக் சபேஸ் கதாநாயகனுக்கு இணையாக படம் முழுக்க வருகிறார். என்றாலும், ஒரு சில காட்சிகளில் மட்டுமே இவர் செய்யும் காமெடியை ரசிக்க முடிகிறது.

    குணாவாக வரும் சம்பத்தை இந்த படத்தில் வீணடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். குறைவான காட்சிகளே வருகிறார். மிடுக்கான தோற்றம், கலர் கலராய் உடைகள் என அசத்துகிறார். படத்தில் வரும் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடும் இவருக்கு ஜோடி கொடுக்காதது அவருக்கு வருத்தமாக இருந்ததோ என்னவோ, நமக்கு வருத்தம்தான்.

    சேட்டுவாக வரும் அதுல் குல்கர்னி நடிப்பில் வில்லத்தனம் காட்டுகிறார். பார்வையாலேயே மிரட்டும் இவரது நடிப்பு அபாரம்.

    கேங்ஸ்டர் படமாக உருவாக்கியிருக்கும் இயக்குனர் தரணிதரன், கேங்ஸ்டர் படங்களுக்கே உண்டான விறுவிறுப்பை திரைக்கதையில் உருவாக்க தவறியிருக்கிறார். மேலும், படத்தின் எந்தவொரு கதாபாத்திரத்தையும் சுவாரஸ்யம் இல்லாமல் உருவாக்கியிருப்பது மேலும் பலவீனம். இவருடைய வசனங்கள் படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.

    யுவனின் ஒளிப்பதிவு படத்திற்கு மெருகூட்டியிருக்கிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் லைட்டிங் அமைத்து படமாக்கியிருப்பது அருமை. சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசையில் மட்டுமே வேகம் தெரிகிறது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

    மொத்தத்தில் ‘பர்மா’ வேகம் இல்லை

    பாலியலுக்கு அடிமைப்படுதல் என்பது என்ன? மீள்வது எப்படி?

    By: Unknown On: 07:44
  • Share The Gag

  •  "உளவியல் நோக்கில் பாலியல் அடிமையாவதை எப்படித் தடுக்கலாம்?" என்ற கேள்விக்குப் பதில் தேடும் பதிவாக இதனைக் கருதிக்கொள்ளவும்.

    உள்ளத்தை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே ஆக்க முயற்சிகளில் ஈடுபடமுடிகிறது. நாம் தூங்கிவிட்டால், உள்ளம் தன் விருப்பம் (சுதந்திரமாக) போலச் செயற்படுகிறது. கனவு காண்கிறோம்; விழித்துக் கொள்கிறோம். ஆயினும், தூங்காமலே சற்றுச் சோர்வுற்றாலும் கூட உள்ளம் தன் விருப்பம் (சுதந்திரமாக) போலச் செயற்படும். எதையெதையோ நினைப்போம்; திடுக்கிட்டு விழிப்போம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த உண்மையே!
     உணர்வற்ற உள்ளம்(Unconscious Mind); உணர்வு உள்ளம்(Conscious Mind) செயற்படாத வேளை தனது முழுப்பலத்தையும் காட்டத் தொடங்கிவிடும். அதனால் தான் கனவுகள், கற்பனைகள், பாலியல் (Sex) இச்சைகள் தோன்ற வாய்ப்பு ஏற்படுகிறது.

     உணர்வற்ற உள்ள(Unconscious Mind)த்தை Carl Jung (Sigmund Freud இன் மாணவர்) அவர்கள் Id, Libido என இரண்டாக வகுத்து Id அறிவு சார்ந்த செயலுக்கும் Libido பாலியல் (Sex) இச்சைகள் சார்ந்த செயலுக்கும் காரணம் எனத் தெரிவித்தார். ஆயினும், பாலியல் (Sex)சார்ந்த இச்சைச் செயலை வேறு பக்கங்களில் (கதை எழுத, கவிதை எழுத எனப் படைப்பாக்க) திருப்பிவிடுவதனால் சிறந்த படைப்பாளியாக முடியுமென்கிறார். பாலியல் அடிமை(Sexual Addiction)யாகாமல் Carl Jung அவர்களின் வழிகாட்டலின் படி உள்ளத்தை ஆக்க வழிகளில் திருப்பிச் சாதனை படைக்கலாம் வாருங்கள்.
     பாலியல் உணர்வு (Sex Feelings) பெண்ணுக்குப் பூப்படைந்த பின்னும் ஆணுக்கு மீசை அரும்பிய பின்னும் ஏற்படும். அதாவது, 11-13 அகவைக் காலத்தில் பாலியல் ஓமோன்கள்(Sexual Hormones) சுரக்கத் தொடங்குவதாலேயே இந்நிகழ்வுகள் ஏற்படுகின்றன. படிப்பு, உழைப்பு, மக்களாய(சமூக) ஒழுக்கம் என்பவற்றைக் கருத்திற் கொண்டே நம்மாளுகள் பாலியல் பக்கம் நாட்டம் குறைவு எனலாம். அதாவது, பாலியல் இச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்தி ஆக்க வழிகளில் உள்ளத்தைப் பயன்படுத்துவதனாலேயே நாம் ஒழுக்கசீலர்களாகவும் வெற்றியாளர்களாகவும் வாழ்கின்றோம். இல்லையேல் மனிதனும் மிருகமாகலாம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த உண்மையே!

     நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிக்க இயலாதவர்கள், பொழுதுபோக்கை விரும்பாதவர்கள், படிப்பு, உழைப்பு எதிலும் அக்கறை இல்லாத உள்ளங்களில் தான் பாலியல் இச்சைச் செயல்கள் வலுவூன்ற இடமுண்டு. இவ்வாறானவர்கள் பாலியல் சார்ந்த நூல்களைப் படிப்பர்; திரைப்படங்களைப் பார்ப்பர்; இணையத் தளங்களைப் பார்ப்பர்; இல்லையேல் ஆண்-பெண் பால் வேறுபாட்டை ஆய்வு செய்து அரட்டை அடிப்பர். இதனால் தான் பாருங்கோ, இவர்கள் சுயஇன்ப (Masturbation) முயற்சிகளிலும் தகாத உறவுகளில் ஈடுபடும் முயற்சிகளிலும் இறங்குகின்றனர். இவ்வாறானவர்களுக்குப் பாலியல் சார்ந்த இணையத் தளங்களே பின்னூட்டியாக இருப்பதும் உங்களுக்குத் தெரிந்த உண்மையே! இவை காலப்போக்கில் வழக்கப்பட்டுவிட; இவையின்றி வாழமுடியாத நிலையே தோன்றும். இந்நிலையையே பாலியல் அடிமை (Sexual Addiction) என்கிறார்கள்.

     பாலியல் சார்ந்த நூல்கள், வணிக ஏடுகள், பாலியல் சார்ந்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாலியல் சார்ந்த இணையத் தளங்கள் போன்ற எல்லாமே நம்மாளுகளின் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கூட்டிப் பெருக்கிப் பாலியல் சார்ந்த தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. இவற்றின் பக்கம் நாடியோர், எப்படி இவற்றிற்கு அடிமையாகாமல் மீளமுடியும்? நல்ல நல்ல சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்கலாம்; கதை, கவிதை என ஏதாவது எழுதி நல்ல படைப்புகளை ஆக்கி வெளியிடலாம்; இன்றைய திரைக் கலைஞர்களான வடிவேலு, விவேக், சந்தானம் போன்றோரின் நகைச்சுவைக் கட்டங்களைப் பார்க்கலாம்; இவ்வாறு பாலியல் எண்ணங்களைத் தூண்டாத, உள்ளத்தில் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் செயல்களில் இறங்குவது நலமே! அதாவது, Carl Jung அவர்களின் வழிகாட்டலின் படி உள்ளத்தை ஆக்க வழிகளில் பயன்படுத்தலாம்.

    எடுத்துக்காட்டாக:
    பாலியல் எண்ணம் தோன்றும் போது
    உள்ளத்தில் நீ வருவாய்
    ஆனால்,
    உன்னுடன் AIDS உம் வருவதை
    எண்ணிப்பார்க்கையிலே
    எனக்கோ
    வயிற்றாலை அடிக்கிறதே!

    என்றவாறு கதைகளைப் பாக்களைப் புனையலாமே!

    எதிர்பாராத வழியில் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆகிவிட்டீர்  என உணர்ந்துகொண்டால், பாலியல் மருத்துவரை(Sexologist) அல்லது உளநல மதியுரைஞரை(Counsellor) ஐ நாடலாம். ஆயினும், இணையத்தளங்களை நம்பி மதியுரை கேட்கச் செல்லாதீர்கள். பெரும்பாலும் அத்தளங்களில் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆவதிலிருந்து விடுதலை பெற்றுத்தருவதாய்க் கூறி, பாலியல் உணர்வுகளைத் (Sex Feelings) தூண்டும் படங்களை இட்டிருப்பர். இத்தளங்கள் பாலியல் உணர்வுகளைத் (Sex Feelings) தூண்டவும் வழிகாட்டுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, பாலியல் மருத்துவரை(Sexologist) அல்லது உளநல மதியுரைஞரை(Counsellor) நேரில் சந்தித்து பாலியல் அடிமை (Sexual Addiction) ஆவதிலிருந்து விடுதலை பெறுவதையே வரவேற்கிறேன்.

     நான் சந்தித்த மதியுரைநாடிகள் பலரது கேள்விகள், சுயஇன்பம் (Masturbation) பற்றியதாகவே இருந்தது. தோன்றும் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்த இயலாத போது, குறிப்பிட்ட ஆள்கள் சுயஇன்பத்தை (Masturbation) நாடுவதாகத் தெரிவித்திருந்தனர். பாலுறுப்புகளைச் செயற்கை முறைகளில் தூண்டி மகிழ்வடையும் இச்செயலை ஆண், பெண் இருபாலாருமே மேற்கொள்கின்றனர். இது உடலளவில் மகிழ்ச்சியடைய உதவாமல், உள்ளத்தில் மகிழ்வடைவதாக எண்ணி எண்ணி மகிழ்வடைய உதவலாம். சுயஇன்பம் (Masturbation) என்பது உடனடிப் பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்தினாலும் பின்விளைவாகப் பெரும் பாதிப்புகளை அள்ளித்தரும்.

     நம்மாளுகள் ஒரு தடவை சுயஇன்பம் (Masturbation) மேற்கொண்டால் 200கிலோ கலோரிக்கு மேல் உடலிலுள்ள சக்தியைச் செலவு செய்கின்றனர். இதனை அடிக்கடி மேற்கொண்டு வந்தால் சக்தியிழப்புக் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படலாம். ஆயினும், உள்ளத்தோடு தொடர்புபட்ட செயலாகையால் உள(மன) நோய் ஏற்படவாய்ப்பு உண்டு. மேலும், இயற்கை உறுப்புகளைச் செயற்கை வழிகளில் கையாள்வதால் பாலியல் குறைபாட்டு நோய்களும் வருமே! சுயஇன்பத்தால் (Masturbation) ஏற்படும் பின்விளைவை எண்ணியாவது இப்பக்கம் தலையைக் காட்டாமல் இருப்பது நலமே!
     மணமாகாத இருவர் கூடுவதையும் மணமுடித்தவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லையை மீறிப் பலருடன் கூடுவதையும் தகாத பாலியல் உறவென்று கூறிக்கொள்ள முடியும். இதனால் முறையற்ற வழியில் பெண்கள் கருத்தரிக்கிறார்கள். இச்செயலால் ஒருவர் உடலிலுள்ள தொற்றுக்கிருமி மாற்றார் உடலுக்குள் செல்லவும் வாய்ப்புண்டு. இவ்வாறு தான் AIDS நோயும் பரவுகின்றது. இச்செயல் பெரும்பாலும் களவாக இடம்பெறுவதால் மக்களாயம்(சமூகம்) கண்டுபிடித்தால் குறிப்பிட்டவர்களை ஒதுக்கியே வைத்துவிடும்.

     மேலும், தகாத பாலியல் உறவால் பெண்கள் கருவுறலாம். மக்களாய(சமூக)த்திற்கு அஞ்சி பாட்டி மருத்துவமோ, மருந்துக் கடைகளில் வேண்டிய மருந்தோ பாவித்து வீட்டிலேயே கருக்கலைப்புச் செய்து சாகவேண்டி வரலாம். பெண் வயிற்றில் குழந்தை கருவுற்று 90 நாட்களுக்குப் பிந்திக் கருக்கலைப்புச் செய்தும் சாவைச் சந்திக்கின்றனர். இச்செயல்களினால் பெண்ணுக்கு அதிக செந்நீர்(குருதி) வெளியேறுவதனாலேயே சாவு ஏற்படுகிறதாம். கருக்கலைப்பு என்பது மருத்துவரின் வழிகாட்டலின் படியே மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கு வரவில்லை என்றறிந்ததும் மகப்பேற்று மருத்துவரை நாடுவது நலமே! தகாத பாலியல் உறவால் ஏற்படும் பின்விளைவை எண்ணியாவது இப்பக்கம் தலையைக் காட்டாமல் இருப்பது நலமே!

     பாலியல் என்பது தலைமுறைகளைத் தோற்றுவிக்கவும் ஊடலின் பின் கூடல் என்றவாறு கணவனும் மனைவியும் இணைந்து மகிழ்வான, நம்பிக்கையான, அன்பான குடும்ப வாழ்வை அமைக்கவும் உதவும் கருவியாகவே இருக்கவேண்டும். எனவே ஒழுக்கம் பேணுவதால், உள்ளத்தை ஆக்கவழியில்   ஈடுபடுத்துவதால், பாலியல் உணர்வுகளைக் (Sex Feelings) கட்டுப்படுத்துவதால் பாலியல் அடிமை (Sexual Addiction) ஆகாமல் குடும்பத்தில் நல்லுறவு ஓங்க நீண்ட ஆயுளுடன் வாழ முடியுமே!

    விஜய்க்கு போட்ட செட்டில் நட்டி நட்ராஜ்..!

    By: Unknown On: 06:59
  • Share The Gag
  • குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆட 'சதுரங்க வேட்டை’ நட்ராஜை லவட்டிக்கொண்டு போயிருக்கிறார், சுசீந்திரன். விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் 'ஜீவா’ படத்தில்தான் நட்டு கழட்டும் நட்டியின் நடனம்.

    ஏற்கெனவே மோகன் ஸ்டுடியோவில் போடப்பட்ட 'ஜில்லா’ பட மார்க்கெட் செட்டில் நட்டி ஆடும் குத்துப் பாட்டைப் படமாக்கி, தயாரிப்புச் செலவை மிச்சப்படுத்தி இருக்கிறார்கள்.

    பெண்களைப் பார்க்கும் ஆண்களின் மோக பார்வை ?

    By: Unknown On: 00:23
  • Share The Gag
  • பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை முற்றிலும் நீங்கவில்லை. பெண்களின் உடல் உறுப்புகளை செக்ஸ் அப்பீலுக்காக மட்டுமே பார்க்கும் பார்வைகளே இங்கு அதிகம்.

    அதிலும் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்கள் மத்தியில் பெரும் மோகமே உண்டு. செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாக மார்பகங்கள் பார்க்கப்பட்டாலும் கூட தாய்மையின் சின்னமாக அதை மதிப்பவர்கள், சிலரே.

    மார்பகங்கள் செக்ஸுக்கா, குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கா என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இரண்டுக்கும் என்பதுதான் இதுவரை கிடைத்து வரும் பதிலாக உள்ளது.

    ஆனால், குழந்தைப் பிறப்பின்போதுதான் பெண்களின் மார்பகங்கள் கெளரவமாக பார்க்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மைதான். பிற நேரங்களில் அதை செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.

    ஒரு பெண்ணுக்கு எப்படி கால்கள், கைகள், கண்கள் இருக்கிறதோ அதுபோலத்தான் மார்பகங்களும். ஆனால் மார்புகளை மட்டும் வித்தியாசமாக கையாளுவது காலம்காலமாக இருந்து வருகிறது. பெண்களைப் பார்க்கும் ஆண்களின் பார்வை மார்பகங்களின் மீதுதான் முதலில் படுகிறது. இது இயல்புதான்.

    சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் கூட மார்பகங்களை கவர்ச்சிப் பொருளாக காட்டி காட்டியே அதன் உண்மையான அவசியத்தை மாசுபடுத்தி வைத்துள்ளனர். பெண்களின் மார்புகளைக் காட்டி எடுக்கப்படும் காட்சிகள் இல்லாத சினிமாக்களே இல்லை எனலாம்.

    அதற்காக செக்ஸில் மார்புகளுக்கு வேலையே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டும் மார்பகங்கள் இல்லை. அதையும் தாண்டி புனிதமான வேலையை அவை செய்கின்றன.

    பெண்கள் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மார்பகங்கள். பெண்களுக்கு எழில் தருவதாக மட்டுமல்லாமல் மிகவும் சென்சிட்டிவான ஒரு உடல் பாகமாகவும் அது திகழ்வதால் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.

    மார்பகப் பராமரிப்பி்ல் பெண்கள் கவனம் செலுத்தாவிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    பிரா அணிவது முதல் மார்பகங்களின் அளவு, அதில் தென்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து பெண்கள் தொடர்ந்து கவனத்துடன் இருந்து வர வேண்டியது அவசியம்.

    தங்களது மார்பக அளவுக்கேற்ற பிராக்களை அணிவது மிகவும் முக்கியம். அதிலும் கர்ப்ப காலத்தின்போதும், மாதவிடாயின்போதும் பெண்களின் மார்பகங்கள் பல மாற்றங்களை சந்திக்கும். அப்போது அதற்கேற்ற வகையில் உள்ளாடைகளை அணிய வேண்டும்.

    சிலருக்கு இரவு நேரங்களில் பிராக்கள் அணிய வேண்டுமா என்ற சந்தேகம் வரலாம். பெரியஅளவிலான மார்பகங்களை உடையவர்கள் இரவிலும் கண்டிப்பாக பிராக்களை அணிவது அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அப்போதுதான் சீக்கிரமே மார்புகள் தளர்ந்து போவதை தடுக்க முடியும் என்பது அவர்களது அறிவுரை.

    கர்ப்ப காலத்தில் மார்புகள் பெருக்கும். எனவே அதற்கேற்ற பிராவை அணிவது அவசியம். மேலும் இறுக்கமான பிராக்களை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், பாலூட்டுவதற்கு முன்பும், முடிந்த பின்னரும், சுடுநீரில் மென்மையான துணியை நனைத்து அதைக் கொண்டு மார்புக் காம்புப் பகுதிகளை துடைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கும், தாய்மார்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    சிலருக்கு மார்பகங்களின் அளவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். எனது வயதுப் பெண்களுக்குப் பெரிதாக உள்ளது. எனக்கு அவ்வாறு இல்லையே என்று வருந்தலாம். அதற்காக செயற்கையான முறையில் மார்பகங்களைப் பெருக்கிக் கொள்ள முயலுவதில் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வது நல்லது. அப்படிச் செய்யப் போய் உடல்நலக் கேடுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட நேரிடும்.

    அதற்குப் பதில் மார்பழகை எடுப்பாக்கிக் காட்டும், உடலுக்கு ஆபத்தை விளைவிக்காத சிறப்பு பிராக்களை அணியலாம். அதுபோன்ற அபாயமில்லாத வழிகளை நாடலாம்.

    மார்பக புற்றுநோய் இப்போது படு சாதாரணமாக காணப்படுகிறது. இதை நாமே வீட்டில் கண்டுணர முடியும். முழு நீள கண்ணாடி முன்பு நின்று கொண்டு இரு கைகளையும் மேலே உயர்த்தித் தூக்கிக் கொண்டு இரு மார்பகங்களும் சரியான அளவில் உள்ளதா என்பதைப் பார்க்கலாம். மேலும் மார்பின் மையப் பகுதியை சுற்றுவது போல கையால் அழுத்திப் பார்க்கலாம். வலி இல்லாமல் கனமான கட்டி போல தென்பட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும். மேமொகிராம் மூலம் அது என்ன என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துக் கூறுவார்கள்.

    சில பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொள்ளும் அல்லது நீர் கட்டிக் கொள்ளும். பாலூட்டுவதை நிறுத்தும்போதும் இதுபோல ஏற்படும். எனவே அதை வைத்துக் கொண்டு மார்பகப் புற்றுநோயோ என்று பயந்து விடக் கூடாது.

    மார்பக புற்று நோய் வந்தால் அதை அகற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சரை சரி செய்யும் வழிகள் இப்போது வந்து விட்டன.

    இப்படி மார்பகங்கள் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாக இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டியதும், பாதுகாப்பதும், கவனமுடன் இருப்பதும் மிக மிக அவசியமாகும். மாறாக அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட பாராமல், முக்கிய உடல் உறுப்பாக கருதி விழிப்புடன் இருப்பது நல்லது.

    Thursday, 11 September 2014

    வெறும் வாயை மெல்லாதீங்க ஏலக்காயை மெல்லுங்க!

    By: Unknown On: 23:53
  • Share The Gag
  • சிலர் எப்போது பார்த்தாலும் எதையாவது மென்று கொண்டிருப்பார்கள். சூயிங்கம், சிக்லெட், சாக்லேட் போன்ற எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருப்பதற்கு பதில்,  ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். அது நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.

    ஏலக்காயில் உள்ள ‘வாலட்டைல்’ என்ற எண்ணெய் வாசனையை தருவதோடு, சில நோய்களையும் குணப்படுத்துகிறது.

    இதில் உள்ள காரக்குணம், வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி, உணவு எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

    பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

    நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவகளும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமைகிறது. ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.
    வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.

    சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    கத்தி படத்தின் பாதிப்பு 'ஐ’யிலும் தொடர்கிறது!

    By: Unknown On: 23:25
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் விளம்பரத்திற்கு வித்தியாசமாக ஏதேனும் செய்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் மோஷன் கேப்சர் டீசர் என்று கத்தி படத்தில் தான் ஆரம்பித்தது.

    இதை தொடர்ந்து லிங்கா, நாய்கள் ஜாக்கிரதை ஹிந்தியில் பி.கே போன்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும் இந்த டெக்னாலஜி தான் பயன்படுத்தப்பட்டது.

    தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ படத்திற்கு இன்று இரவு 12 மணியளவில் மோஷன் கேப்சர் முறையில் தலைப்பு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    சுரண்டாதீங்க...உஷார்..

    By: Unknown On: 22:38
  • Share The Gag
  • ‘வெள்ளி நைட்ரோ ஆக்சைட்’ தெரியுமா?

    இதை நீங்கள் தினம் தினம் பார்த்துக் கொண்டுதான்... இல்லை...சுரண்டிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.

    செல்போன் ரீசார்ஜ் கார்ட்டில் உள்ள எண்ணை மறைக்க சில்வர் கலரில் ஒரு கோட்டிங் கொடுத்திருப்பார்களே, அதுதான்  வெள்ளி நைட்ரோ ஆக்சைட்.

    செல்போன் ரீசார்ஜ் செய்பவர்கள், இந்த வெள்ளி கோட்டிங்கை சுரண்டி தான் ரீசார்ஜ் எண்ணை பார்ப்பார்கள்.  இந்த வெள்ளி நைட்ரோ ஆக்சைட், மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதாக ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராச்சிநிலையம் இதை கண்டறிந்துள்ளது.

    எனவே, சுரண்டும் வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம். நகங்கள் மூலம் இந்த வெள்ளி நைட்ரோ ஆக்சைட் நம் வயிற்றில் சென்றால், புற்றுநோய் வரும்.

    ஆணுறுப்பு வேகமாக எழுச்சி கொள்ளவில்லையா சரிசெய்ய 9 இயற்கை வழிகள்

    By: Unknown On: 21:36
  • Share The Gag
  • ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது.

    இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை சிகிச்சையில் நம் கவனத்தை செலுத்தியுள்ள நாம் கீழ் கூறியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

    ஆண்மை குறைவை நிவர்த்தி செய்யும் உணவுகள், ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிச்சைகள், விறைப்பு செயல் பிழற்சியை குணப்படுத்தும் உணவுகள் மற்றும் விறைப்பு செயல் பிழற்சிக்கான இயற்கை சிகிச்சைகள். சரி இப்போது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதோ அதற்கான 9 வழிகள்…

    பூண்டு;பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த ஓட்டத்தை சீராக்கி அழுத்தத்தை அதிகரிக்க பூண்டு உதவும். இதனால் பாலியல் உறுப்பு தூண்டப்படும். மேலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பூண்டில் பல கனிமங்கள் வளமையாக உள்ளது.

    மாட்டிறைச்சி;மாட்டிறைச்சியில் ஜிங்க் வளமையாக உள்ளது. இந்த ஜிங்க் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முதன்மையான இயற்கை பொருளாக விளங்குகிறது. இது விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினை குணப்படுத்தும் சில சக்தி வாய்ந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

    மாதுளை பழம்;மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்தி வாய்ந்த உணவாக விளங்குகிறது. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்கள் வளமையாக உள்ள இந்த பழம் இயற்கையான முறையில் ஆண்மை குறைவை நீக்கும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்கும்.

    வாழைப்பழங்கள்;தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால போதும், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற முக்கிய என்ஸைம் உள்ளது. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போக வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை ஊக்குவித்து, பாலியல் மனநிலையை தூண்டி விடும்.

    வால்நட்;இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் முக்கியமான பொருளான அர்கனைன் வால்நட்களில் உள்ளது. விந்தணு உற்பத்தியில் விரைக்கு உதவிடும் அர்கனைன். திடமான விறைப்பிற்கும் கூட வால்நட் உதவுகிறது. இது போக, வால்நட்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், ஆண்களின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிடும்.

    அஸ்பாரகஸ்;அஸ்பாரகஸ் என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது இது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

    உடற்பயிற்சி;இப்போது நம் கவனத்தை சற்று திருப்பி, ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிக்ச்சைகள் பக்கமாக மாற்றுவோம். உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமாகும். உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு இல்லையென்றால், தானாகவே விந்தணு உற்பத்தி மேம்படும். அதனால் இளைத்த எடையில் ஆரோக்கியமாக விளங்கிடுங்கள். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் மெட்டபாலிச வீதத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

    கீரை மற்றும் பச்சை காய்கறிகள்;ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ள கீரை மற்றும் பச்சை காய்கறிகள் உங்கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை சிறப்பாக குணப்படுத்தும்.

    பாதாம்;வால்நட்களை போல் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை இயற்கையான வழியில் குணப்படுத்தும் ஆச்சரியமளிக்கும் மற்றொரு உணவு தான் பாதாம்…..!

    கணினி கவசம்

    By: Unknown On: 20:39
  • Share The Gag
  • துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
    பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
    கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
    பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
    உன்னிப்புடன் நெஞ்சே குறி!

    காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
    அடியேன் சிஸ்டம்  அழகுவேல் காக்க
    வின்டோசைக் காக்க வேலன் வருக
    கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
    இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
    பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
    செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
    வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
    முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
    வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
    சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
    எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
    பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
    ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
    மவுசை மகேசன் மைந்தன் காக்க
    எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
    அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
    எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
    அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
    அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
    நில்லாதோட நீ எனக்கருள்வாய் ஹாங் ப்ராப்ளமும்
    ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
    என் பெயர் சொல்லவும்
    இடி விழுந்தோடிட
    ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
    அலறவே வைத்திடும்
    ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
    வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
    அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
    பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
    பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
    மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
    மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
    மூவாகல் மூர்க்கம் செய்யும்
    மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
    நகர நீ எனக்கருள்வாய்
    கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
    டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
    போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
    கன்னா பின்னாவென்று வரும்
    கமான்ட் இன்டட் ரெப்டுகளை
    கந்தன் கைவேல் காக்க
    அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
    பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
    மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
    என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
    ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
    அனைத்து ஃபோர்டர்ஸீம்
    ஆயுளோடு விளங்க
    டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
    விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
    சிறப்புடன் வாழ்க.
    அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
    அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
    ஷட்டௌன் தடங்கல்
    சட்டென்று நீங்க
    ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
    கணினி சிஸ்டம் கவசம் இதனை
    சிந்தை கலங்காது கேட்பவர்கள்,படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
    படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
    வாழ்க கணினி. வளர்க மவுஸ்.
    சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

    தல-55 ராஜஸ்தானில் மிரட்டும் சண்டைக்காட்சி!

    By: Unknown On: 19:59
  • Share The Gag
  • கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. மேலும் படம் இந்த வருடமே வெளிவரும் என்ற தகவலை கூறி ரசிகர்களை குஷிப்படுத்தினார் கௌதம்.

    தற்போது படக்குழு ராஜஸ்தான் பறக்கவுள்ளது. அங்கு படத்தில் இடம்பெறும் பயங்கர சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    அந்த பக்கத்தில் மச்சம் உள்ள பெண்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா..? அடேங்கப்பா .

    By: Unknown On: 18:43
  • Share The Gag
  • பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை
    கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான
    அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம்
    என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.

    அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே
    அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும்
    என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக இன்னும்
    புரியாத புதிர்தான். ஆனால் ஜாதக ரீதியாக ஒரு மச்சம் பெண்ணின் உடலில் எந்த பாகத்தில்
    இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் மச்ச பலன்களை தருகிறது.

    சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில்
    இருக்கும் விஷயம். ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை
    ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. ,


    குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் அந்தரங்க பகுதிகள் மச்சம் இருந்தால் அவர்கள் பாலியல் தொடர்பில் அவர்களின் ஆசை தீரதாவர்களாக உள்ளவர்களாம். மார்பு மற்றும் அவர்களின் அந்தரங்க பகுதிகளில் உள்ளவர்களே இவ்விதம் தங்கள் இச்சையை தீர்த்து கொள்ள
    ஆடவர்களை நாடி செல்பவர்களாக இருப்பார்களாம .

    ஐ படத்தால் நின்ற லிங்கா!

    By: Unknown On: 17:46
  • Share The Gag
  • சூப்பர் ஸ்டார் நடிப்பில் லிங்கா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பாடல்கள் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கிறது.

    இந்நிலையில் இன்னும் 2 வாரத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏன் என்று விசாரித்தால் ஷங்கர் தான் இயக்கிய ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ரஜினிக்கும், ஷங்கரின் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதால் சம்மதம் தெரிவிக்க, லிங்கா படப்பிடிப்பிற்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    ஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்...

    By: Unknown On: 17:13
  • Share The Gag
  • ஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்

    ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் கலவி அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை ஆசை ஏற்படாத நிலையில் கலவிக்கு அழைக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

    கீழ்கண்ட பல்வேறு காரணங்களால் செக்ஸ் அனுபவிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    1. உடல் அசதி
    2. மன அழுத்தம்
    3. மாதவிலக்கு
    4. உடல் நலமின்மை
    5. தம்பதிகளுக்குள் சண்டை
    6. அதிக போதை
    7. கடந்தமுறை செக்ஸில் நடந்த மோசமான நிகழ்வு
    8. தொடர்நது ஒரே நிலையில் உறவுகொள்வதில் ஆர்வம் இன்மை

    மேற்கண்ட காரணங்களால் செக்ஸை தவிர்க்க நினைக்கும் போது விலகிநிற்பதே நல்லது. ஆனால் மனம், உடல் நலத்தைச் சீரமைக்க உடலுறவால் முடியும் என்பதால் மேற்கண்டவற்றை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னுடைய இணையைச் சந்தோஷம் அடைய வைத்து இந்த சிக்கலில் இருந்து செக்ஸ் மூலம் விடுதலை வாங்கித் தரவும் முடியும். ஆனால் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கிய கட்டமாக இருக்க வேண்டும். இதற்கு ஆண் அல்லது பெண் மிகவும் பொறுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு தொட்டாலே உணர்ச்சி தூண்டப்பட்டுவிடும். இன்னும் சிலருக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். தன்னுடைய இணை எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அதன்படி அணுகி இன்பத்துக்கு அழைப்பதுதான் சரியான வழியாகும்.

    விஜய்யை கூப்பிடணும்…. விஜய்யை கூப்பிடவே கூடாது… அநியாய குழப்பத்தில் ஐ ஆடியோ விழா?

    By: Unknown On: 08:10
  • Share The Gag
  • ஷங்கரின் குட் புக்கில் எப்போதும் இருக்கிறார் விஜய். அண்மையில் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷங்கர் அழைத்தது சிலரைதான். அதிலும் முக்கியமாக இரண்டே இரண்டு பேரை!. ஒருவர் விக்ரம். மற்றொருவர் விஜய். அந்தளவுக்கு விஜய்யின் மீது நேசத்துடன் இருக்கும் ஷங்கருக்கும், அவரது குட்புக்கில் இருக்கும் விஜய்க்கும் ஒரு சேர வந்திருக்கிறது ஒரு சங்கடம். அதுதான் இந்த ஐ படத்தின் ஆடியோ பங்ஷன்.

    செப்டம்பர் 15 ந் தேதி ஆடியோ வெளியீட்டு விழா என்று அறிவித்தாகிவிட்டது. ஹாலிவுட்டிலிருந்து ஆர்னால்டே வீடியோவில் தோன்றி ‘வர்றேன்….’ என்று அறிவித்துவிட்டார். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் விழா நடைபெறும் இடமும் தெரியவில்லை. இன்விடேஷனும் தயாராகவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
    ஷங்கரின் விஜய் குறித்த கண்டிஷன்தான் என்கிறார்கள். இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருப்பது ஜெயா தொலைக்காட்சி. அப்படியானால் இந்த பாடல் வெளியீட்டு விழாவை ஒளிபரப்புகிற உரிமையும் அதற்கேதான். நிலைமை அப்படியிருக்க, ஷங்கரின் ஆசை செல்லுபடியாகுமா? தலையை சொறிகிறாராம் தயாரிப்பாளர். ‘அவரை விட்டுட்டு இந்த விழாவை நடத்திடலாமே’ என்பதுதான் அவரது வேண்டுகோள். ‘விஜய் வரலேன்னா இந்த விழாவை நான் புறக்கணிப்பேன்’ என்கிற அளவுக்கு இந்த விஷயத்தில் ஷங்கர் உறுதியோடு நிற்கிறாராம். ‘விஜய் இந்த விழாவுக்கு வந்தால் நாங்க மேலிடத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதனால் அவரை அழைக்க வேண்டாம்’ என்கிறார்களாம் சேனல் தரப்பில்.

    ‘என்னால எதுக்கு எல்லாருக்கும் சங்கடம்? நான் வீட்டிலேயே இருந்துடுறேனே…’ என்கிறாராம் விஜய்.

    விழா நடக்குமா? ஆர்னால்டு வருவாரா? ஆர்னால்டே வந்தாலும் விஜய்க்கு அங்கு இடமிருக்குமா? கேள்விகள்… கேள்விகள்…